Saturday, January 16, 2021

நபிமார்களின் பரிசுத்ததை ‎(عصمت) ‏மறுக்கின்றவர்கள் மீது இறைவனின் பேரிடி!* ‏

*قہر کبریا بر منکرین عصمت انبیاء*

*நபிமார்களின் பரிசுத்ததை (عصمت) மறுக்கின்றவர்கள் மீது இறைவனின் பேரிடி!* 
💦💦💦💦💦💦💦💦💦💦
  *உருது மூலம்:ஜாஅல் ஹக்!*
   *முப்தி அஹ்மத் யார் கான்.*     
          *றஹ்மத்துள்ளாஹி*
                    *அலைஹி*
          *விஷேட இணைப்பு!* 
                       *தமிழில்*
💦💦💦💦💦💦💦💦💦💦
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,     
  மௌலவி பாஸில் ஷெய்கு   
    *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,* 
   பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. 
💦💦💦💦💦💦💦💦💦💦.

தேவ்பந்திகளின் நாக்களாம்புழுக்கள், நபிமார்களை கேவலப்படுத்துகின்ற வேலையை மக்கள் மத்தியில் செய்த காரணத்தால், இந்தியாவில் புதியதொரு இயக்கம் முளைத்திருக்கின்றது. இவர்கள் ம ஆதல்லாஹ்! நபிமார்களை பாவிகள், முஷ்ரிக்குகள், காபிர் என்றெல்லாம் கூறுகின்றனர்.

நபிமார்கள் தனது வாய்களால் உளறிக்கொட்டியதால் ஆரம்பத்தில் முஷ்ரிக்காகவும், காபிராகவும் இருந்தார்கள். பெரும்பாவியாகவும் கூட இருந்தார்கள்; பின்னர் தவ்பாச்செய்து நபியானார்கள்என்று நாக்கூசாமல்  இக்கூட்டம் கூறுகின்றது.

என்னிடம் குச்சிப் பேனாவும், சிறிதளவு காகிதமும் இருக்கின்றது. அதன்மூலமாக இவர்களுக்கு மறுப்பெழுதுகின்றேன். எனது கண்ணியம், மரியாதை, நாவு, பேனை உள்ளிட்ட சகலதும் நபிமார்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக அற்பணமாகட்டும் என்று இறைஞ்சுகின்றேன்.

ஸெய்யிதுனா ஹளறத் ஹஸ்ஸான் இப்னு தாபித்  றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழகாகக் கூறினார்கள்.

فان ابي ووالدتي وعرضي 
لعرض محمد منكم وقاء   

நிச்சயமாக எனது தந்தையும், தாயும், எனது செல்வமும் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கானதுமான யாவும் உங்களிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுவிட்டது.

மேற்படி கட்டுரை "அல்பகீஹ்" என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்ததாகும். முஸ்லிம்களின் வற்புறுத்தலால் இரண்டாவது பதிப்பில் இதனை விஷேட இணைப்பாக சேர்த்துள்ளேன்.

அல்லாஹுத்த ஆலா இதனை அங்கீகரித்து சகல மக்களுக்கும் பயன்மிக்கதாக ஆக்கியருள்வானாக! ஆமீன்.

   முன்னுரை.
    ---------------
குற்றங்கள் ஷிர்க், குப்று, பெரும் பாவங்கள், சிறு பாவங்கள் என்று பலவிதங்களாக இருக்கின்றன.

சிறு பாவங்கள் இருவிதங்களாக உள்ளன. அவற்றில் சில அற்பத்தனமான, இழிவான  சுபாவங்களை வெளிப்படுத்துவதாகும்.

உ+மாக, திருட்டு, அளவையியல் மோசடி உள்ளிட்டவை.
 மற்றும் சில இவ்வாறனதல்ல!

 பின்னர், இந்த வகைகளும் கூட பிடிவாதம், மறதி என்று இருவகைப்படும்.

நபிமார்களிலும் இரு நிலைகள் இருக்கின்றன.

1- நுபுவ்வத் வெளியாக முன்னால் உள்ள நிலை.

2- நுபுவ்வத்திற்குப் பின்னால் உள்ள நிலை.

நபிமார்கள் ஷிர்க்கு, குப்று , கெட்ட அகீதா, வழிகேடு, இழிவான செயல் உள்ளிட்ட சகலவற்றையும் விட்டும் சகல நிலையிலும் அல்லாஹ்வின் பேரருளால் பாதுகாக்கப்பட்டவர்களாகும்.

நபிமார்கள் நுபுவ்வத்திற்கு முன்னும், பின்பும் பிடிவாதமாகவோ, மறதியாகவோ ஒரு விநாடி கூட  கெட்ட அகீதா அவர்களிலிருந்து வரமுடியாது. காரணம் அவர்கள் ஆரிபு பில்லாஹ்வாகவே பிறக்கின்றார்கள்.

மதாறிஜ், மவாஹிப் உள்ளிட்ட நூற்களில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

ஹளறத் பாவா நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டு கண் விழித்தபோது அர்ஷின் தலைவாசலில் 

لا اله الا الله محمد رسول الله

என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்தார்கள். இதன் மூலம் அவர்கள் பிறப்பிலேயே ஆரிபு பில்லாஹ்வாக இருக்கின்றார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது.

ஆசிரியர் இல்லாமலே எழுத வாசிக்க முடியுமானதும், படைக்கப்பட்டதுமே எழுத்தை வாசிக்க முடிந்ததும்இதற்குரிய சான்றுகளாகும்.

 ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததுமே 

إني عبد الله آتني الكتاب وجعلني نبيا 

நான் அல்லாஹ்வின் அடிமை! அவனேதான் எனக்கு வேதத்தைத் தந்தான். என்னை நபியாகவும் ஆக்கினான்.

மேலும் கூறினார்கள்.

واوصني بالصلوة والزكوة ما دمت حيا وبرا بوالدتي ،

நான் வாழும் காலம் முழுவதும் தொழுகையையும், ஸக்காத்தையும் நிறைவேற்றுமாறும், எனது தாய்க்கு உபகாரமாக நடக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
இந்தத் திருவசனத்தின் மூலமாக  அன்னார் பிறப்பிலேயே அல்லாஹ்வின் றுபூபிய்யத்தையும், தனது நுபுவ்வத்தையும், வேதத்தையும் அறிந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது.

மேலும், 

கிரிகையின் ஹிக்மத்தையும், ஒழுக்க விழுமியங்களையும் தனது கவுரத்தைப் பேணும் வழிகளையும் கச்சிதமாக விளங்கியுள்ளார்கள் என்பதும் தெரிய வருகின்றது.

ஹளறத் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே தனது காபிர்கள் சமுகத்தைப் பார்த்து தவ்ஹீதைப் பற்றி சத்திய முழக்கமிட்டார்கள்.

சுப்ஹானல்லாஹ்! 
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மறைவதும், அதன் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் யாவும் அவை படைப்புக்கள் என்பதை  கட்டியம் கூறுவதாக இடித்துக்கூறினார்கள்.

நட்சத்திரங்களைப் பார்த்து  هذا ربي காபிர்களே இது எனது றப்பாக இருக்கமுடியுமா? என்று கேட்டார்கள். அது மறைந்த போது

لا احب الآفلين 

மறைகின்றவற்றை நான் விரும்புவதில்லை என்றார்கள்.

குழந்தைப் பருவத்தில் அவர்களிடமிருந்த அபார திறமைக்கு முன்னால் அபூ அலி இப்னு ஷீனா, பாறாபி உள்ளிட்ட மன்திக் வித்துவான்களெல்லாம்  பூஜ்யமாகிவிட்டார்கள்.
இந்த மன்திக் வித்வான்கள் சகலரும் உலகம் புதிது என்பதற்கு முன்வைத்த ஆதாரம்

العالم متغير ، وكل متغير حادث العالم حادث 

உலகம் மாற்றமடைகிறது. மாற்றமடைபவை புதிதானதாகவே இருக்கும். அதனால், உலகம் புதிதுஎன்பதுதான்! 

மேலும் கூறினார்கள்.

 العالم حادث ولا شيئ من الحادث بمعبود فالعالم ليس بمعبود 

உலகம் புதிதாகும். புதியவையிலிருந்து வணங்கத்தகுதியானவன் வரமுடியாது. அதனால் உலகம் வணங்கத்தகுதியானதல்ல! 

ஹளறத் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன்வைத்த ஆதாரத்தை அல்லாஹுத்த ஆலா பாராட்டி நற்சான்றிதழும் இவ்வாறு வழங்கியுள்ளான்.

تلك حجتنا اتينها ابراهيم علي قومه 
 
இப்றாஹீம் (நபி)அவர்கள் அவர்களின் சமுகத்தாரிடம் முன்வைத்த ஆதாரத்தை நாம்தான் அவருக்கு வழங்கினோம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததுமே ஸஜதாச்செய்து உம்மத்திற்காக இஸ்திஃபார் செய்தார்கள்.

ஆதாரம்: மதாரிஜ், மவாஹிப்.

அல்லாஹ்வையும், தன்னையும் தனது தகுதிகளையும், படித்தரங்களையும் றஹ்மத்துச் செய்யப்பட்ட உம்மத்தையும் தெரிந்தவர்களாகவே நபியவர்கள் பிறந்திருக்கின்றார்கள்.

குழந்தைப் பருவத்தில் சக குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமூட்டியபோது ,
முழு வாழ்க்கைக்கும் போதுமான , அரிஸ்ரோட்டிலும், பிளேட்டோ உள்ளிட்டோரும் வாய்பிளக்கும் தத்துவமான

ما خلقنا   لهذا

இதற்காக நான் படைக்கப்படவில்லை என்று  கூறினார்கள்.

இதை உறுதிப்படுத்தும் வண்ணம் அல்லாஹுத்தஆலாவும் கூறினான்.

وما خلقت الجن والانس الا ليعبدون .

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவேதான் படைத்தேன். 

றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

كنت نبيا وادم بين الماء والطين،

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மண்ணுக்கும், தண்ணீருக்குமிடையிலிருக்கும் போது நான் நபியாக இருக்கின்றேன்.

தப்ஸீர் அஹ்மதியில் ,

لا ينال عهد الظالمين 

என்ற திரு வசனத்தின்  விளக்கத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.

انهم معصومون  عن الكفر  قبل الوحي وبعده باجماع 

சங்கையான நபிமார்கள் வஹி வருவதற்கு முன்னும், பின்பும் இஜ்மாஃவின்படி மஃஸூம் பாதுகாக்கப்பட்டவர்களாகும். 

மேற்கண்ட சுருக்கமான விளக்கத்தின் மூலமாக நபிமார்கள் பிறப்பிலேயே ஆரிபுகளாகவே பிறக்கின்றார்கள்; அவர்களின் ஆழமான இந்தப் பரிசுத்தத்தில் ஒருபோதும் கரும்புள்ளி விழவே மாட்டாது.

நபிமார்கள் நாடி பெரும் பாவம் செய்வதிலிருந்து நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டவர்களாகும். தெரிந்து கொண்டு நுபுவ்வத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி பெரும்பாவம் செய்யமாட்டார்கள். ஆனாலும், 

மறதியாக சில தவறுகள் வரலாம், அதில் நிலைத்து நிற்கமாட்டார்கள்.
 அல்லாஹ்வின் பக்கமாக அவர்களின் கவனம் திருப்பும் போது அவை அது அவர்களிலிருந்து விலகிவிடும்.

இழிவான எந்த ஒரு செயலும் நுபுவ்வத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி ஒருபோதும் நிகழவே மாட்டாது. நெய்யில் கொசு விழுந்தது போன்ற சிறியதும் கூட நபிமார்களிடத்தில் நடக்காது. இந்த விளக்கம் சகலதும் சட்டங்களை எத்தி வைப்பதில் இல்லை .
،،
சட்டங்களை தப்லீஃ செய்வதில் கூடுதல், குறைவு , ஒழித்தல், மறைத்தல் உள்ளிட்ட சகலதிலிருந்து எப்போதும் அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள். இது விடயத்தில் தெரிந்து கொண்டோ, தவறுதலாகவோ, மறதியாகவோ ஒருபோதும் நிகழாது.

ஏனைய நபிமார்களின் விஷயத்தில் சிறு படிவங்கள் நிகழலாம்; ஆனால் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  நுபுவ்வத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி சிறிய, பெரிய பாவங்கள் தெரிந்துகொண்டோ, மறதியாகவோ, தவறுதலாகவோ உம்மத்தின் இஜ்மாஃவின் படி நிகழவில்லை

தப்ஸீர் அஹ்மதியில்,

لا ينال عهد الظالمين 

என்ற திருவசனத்தின் விளக்கத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள் .

لا خلاف لأحد في أن نبينا عليه السلام لم يرتكب صغيرة ولا كبيرة طرفة عين قبل الوحي وبعده كما ذكره ابو حنيفة في الفقه الأكبر 

தப்ஸீர் றூஹுல் பயானில் 

ما كنت تدري ما الكتب 

என்ற திருவசனத்தின் விளக்கத்தில் எழுதுகின்றார்கள்,

يدل عليه انه عليه السلام قيل له هل عبدت وثنا قط قال لا قيل هل شربت  خمرا قط قال لا فما زلت اعرف ان الذي هم عليه كفر 

நீங்கள் எப்போதாவது சிலையை வணங்கினிர்களா? என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டதற்கு, இல்லை என்றார்கள்.
எப்போதாவது மது அருந்தினீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றார்கள். அரபுகளுடைய இந்த அகீதா குப்றிய்யத்தானது என்பதை எப்போதும் நாம் அறிந்தே வைத்திருந்தோம்என்றும் திருவாய் மலர்ந்தார்கள்.

                   தொடரும்.