கலாநிதி அஷ்ரப் , தனது நீண்ட கால விதண்டாவாதமான (இமாம் கஸ்ஸாலி காபிர்) எனும் நொண்டி வாதத்திற்கு சான்றாக பின்வரும் வாசகத்தை இமாம் அவர்களின் இஹ்யாஉ உலூமுத்தீன் என்ற கிதாபிலிருந்து காட்டியுள்ளார்
( فمن عرف الحق رآه في كل شيء ، إذ كل شيء فهو منه وإليه وبه وله فهو الكل على التحقيق )
இந்த வாசகத்தின் கருத்தை மேலோட்டமாக படித்து விட்டு இமாம் கஸ்ஸாலி இங்கே وحدة الوجود எல்லாம் அவனே என்ற குப்ரிய்யதான அகீதாவை பேசுகிறார் என்று உளறுகிறார் .
மறுப்புகள் _
1) இந்த வாசகத்தை தனது தேடலுக்கு அமைவாக ஒரு பகுதியை மட்டும் எடுத்து விட்டு மற்ற ஏனைய முன் பின் பகுதிகளை இருட்டடிப்பு செய்துள்ளார்
( இதுவே இன்று சிலர் செய்யும் மிகப்பெரிய தந்திரமும் மோசடியும் ஆகும் )
பொதுவாக ஒரு இமாமின் சிந்தனைக்கு அவர்களின் முன் பின் வாசகங்களே விரிவுரையாக அமையும்.
இதன் மூலம் தான் அவர்களின் உண்மையான அர்த்தத்தை தத்துவத்தை முன் பின் தொடர்களை வாசிப்பதனாலேயே புரிந்து கொள்ள முடிகிறது.
இங்கே இமாம் கஸ்ஸாலியின் முழுமையான வாசகத்தை தருகிறேன்
( إذ الفعل يدل على الفاعل فتدل عظمته (- الفعل -) على عظمته( - الفاعل -) فينبغي أن يشهد فى الفعل الفاعل دون الفعل ، فمن عرف الحق رآه في كل شيء إذ كل شيء فهو منه وإليه وبه وله فهو الكل على التحقيق ومن لايراه في كل ما يراه فكأنه ما عرفه ومن عرفه عرف أن كل شيء ما خلا الله باطل وأن كل شيء هالك إلا وجهه )
இங்கே தரப்பட்டுள்ள முழு வாசகத்தின் முன் பகுதியான
( إذ الفعل يدل على الفاعل فتدل عظمته على عظمته .... )
அதன் பின் பகுதியான
( ومن عرفه عرف أن كل شيء ما خلا الله باطل وأن كل شيء هالك إلا وجهه )
இவ்விரு வாசகத்தையும் கலாநிதி அஷ்ரப் படித்திருந்தால் இமாம் கஸ்ஸாலியின் முழுமையான அர்த்தத்தை இங்கே புரிந்து கொண்டிருப்பார் ,
இமாம் அவர்கள் தங்கள் வாசகத்தில் இவ்வாறான தத்துவத்தையே தருகிறார்கள்
[ இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துகளும் அழிந்து போகக்கூடியது நிலையற்றது , அழ்ழாஹ் அவன் மாத்திரமே உண்மையானவன் நிலையானவன் , ஒவ்வொரு படைப்புகளை பார்த்து சிந்திக்கின்ற போது படைத்தவனின் மகத்துவத்தை வல்லமையை உணர்ந்து கொள்ள முடியும் என்ற ஒரு முஃமினின் உன்னதமான தத்துவத்தை இங்கே சொல்கிறார் .
இதை புரிந்து கொள்ள முடியாத கலாநிதி அஷ்ரப் எல்லா வஸ்துகளும் அழ்ழாஹ் தான் என்று இமாம் கஸ்ஸாலி சொல்வதாக மிகப் பெரிய அபாண்டத்தை அவர்கள் மீது சுமத்துகிறார்
2) சமூகத்தில் மிகவும் பெரிதாக மதிக்கப்படும் இமாம் கஸ்ஸாலி போன்ற மா மேதைகளின் கருத்துக்களை ஒரு தலைபட்சமாக பார்க்கும் போது அங்கே நாம் தவறு செய்கிறோம்.
இவர்களின் அகீதா எனும் இறைசார்ந்த கொள்கையை படிப்பதாக இருந்தால் மக்கள் மத்தியில் பரப்புவதாக இருந்தால் அவர்களால் எழுதப்பட்ட அகீதா எனும் நூல்கள் அதன் தலைப்புகளில் இருந்து தான் நாம் இதனை விளங்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அங்கே இங்கே அகீதா தலைப்புக்கு வெளியே காணப்படும் வாசகங்களை எங்கள் வாதங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ளவது புத்தி சாதுரியமான விசயமாக நம்பகத்தன்மையாக இருக்க முடியாது .
3) இமாம் கஸ்ஸாலி, அவர்கள்; அனைத்து முஸ்லிம்களுடைய அகீதாவை தனது இஹ்யாஉ உலூமுத்தின் என்ற அதே கிதாபில்( قواعد العقائد) எனும் பகுதியில் மிகவும் தெளிவாக எழுதியுள்ளார்கள் .
( أنه في ذاته واحد لا شريك له فرد لا مثيل له صمد لا ضد له منفرد لا ند له وأنه واحد قديم لا أول له أزلي لا بداية له مستمر الوجود لا آخر له أبدي لانهاية له ........ ) الخ
( وأنه ليس بجسم مصور ولاجوهر محدود مقدر وأنه لا يماثل الأجسام لا فى التقدير ولا في قبول الانقسام وأنه ليس بجوهر ولا تحله الجواهر ولا بعرض ولا تحله الأعراض بل لا يماثل موجودا ولا يماثله موجود ليس كمثله شيء ولا هو مثل شيء .... . ) الخ
( وأنه لا يحل في شيء ولايحل فيه شيء تعالى أن يحويه مكان كما تقدس عن أن يحده زمان ....... ) الخ
( وأنه مقدس عن التغير والانتقال لا تحله الحوادث ولا تعتريه العوارض ....... ) الخ
அழ்ழாஹ் பரிசுத்தமானவன் , தனித்தவன் , எந்த வஸ்துகளை போல் அவன் இல்லை , எந்த வஸ்துகளும் அவன் போல் இல்லை. எந்த வஸ்துகளிலும் அவன் இறங்குவதுமில்லை. அவன் மீது எந்த ஒன்றும் இறங்குவதுமில்லை. அவன் காலங்கள் இடங்களை விட்டும் பரிசுத்தமானவன்........
இவ்வாறு பரிசுத்த முஸ்லிம்களின் அகீதாவை கொள்கையைக எடுத்து கொண்ட இமாம் கஸ்ஸாலி எவ்வாறு இதற்கு மாறாக அங்கே அத்வைதம் எனும் எல்லாம் அவனே என்ற கொள்கையை கூற முடியும் .
உங்களில் ஒருவன்
ஹுஸைன் ஹஸனீ
ஹஸனிய்யா அரபிக் கல்லூரி
قال الامام المجتهد المتفق علي جلالته وعلومه تقي الدين السبكي رحمه الله في مناقب الحجۃ الاسلام امام الغزالي ر حمه الله
لا يكرهه الا حاسد او زنديق ولا يسومه بسوء الا حاءد عن سواء الطريق
طبقات الشافعيۃ الكبري
ج-6صفحۃ201
இமாம்ஙஸ்ஸாலியில்.குறை காண்பவன்பொறா
மைக்காறன், அல்லது
வழிகெட்டஸிந்தீக்ஆவான்.
வழிகெட்டவனைத்தவிர
வேறுஎவரும்அவர்களை
க்குறை கூறமாட்டான்.
ஆதாரம்: தபகாதுஷ்ஷாபிஅத்துல்
குப்றா
பாகம் 6,பக்201