*முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( رضي الله عنه)* அவர்களின்
மகனார் ஷைகு அப்துர் ரஸ்ஸாக் ( رضي الله عنه) கூறுகிறார்கள் :-
என்னுடைய தந்தையார் வாரத்தில் மூன்று முறை பொதுமக்களிடம் பயான் செய்துவந்தார்கள்.
வெள்ளி காலையிலும் செவ்வாய் மாலையிலும் மத்ரஸாவில், ஞாயிறு இரவில் வராந்தாவில் வைத்து பயான்கள்.
அந்த இல்முடைய மஜ்லிஸில் அதிகமான உலமாக்களும் ஷைகுமார்களும் பெரும் மார்க்க சட்ட (ஃபிக்ஹு கலை) வல்லுனர்களும் கலந்துகொள்வதுண்டு.
இந்த பயான் 40 வருடம் தொடரந்து (ஹி:521 லிருந்து ஹி:561 வரை) நடைபெற்றது.
மத்ரஸாவில் பாடம் நடத்தியும் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) வழங்கியும் நீங்கியது 33 வருடகாலமாகும்.
தந்தையாருடைய வாயிலிருந்து உதிர்ந்து வீழும் ஞானங்களை எழுதிவைப்பதற்காக உலமாக்கள் 400 மை பாட்டில்களை உபயோகித்தார்கள்.
ஒவ்வொரு பயான் மஜ்லிஸுகளிலும் 2- 3 பேர் மனமுடைந்து மரணிப்பது வழக்கம்.
பயான் செய்வதின் மத்தியில் மஜ்லிஸில் இருப்பவர்களின் தலைக்கு மீதாக காற்றில் நடந்து செல்வது பல தடவை நடைபெறும். பிறகு தன்னுடைய இருப்பிடத்திற்கே திரும்புவார்கள்.
*ஆதார நூல் :-*
பஹஜத்துல் அஸ்ரார், பக்கம் 495