Saturday, May 9, 2020

தப்லீக் ஜமாத் இயக்கத்தை பற்றிய கேள்வி பதில்கள்

*தப்லீக் ஜமாத் இயக்கத்தை பற்றிய கேள்வி பதில்கள்*

அனைத்து சமுதாய மக்களும் அதிகாரிகளும் தெளிவு பெறுவதற்காக இந்தப் பதிவு

சற்று நீண்ட கட்டுரை தான்  உங்களுடைய  பல சந்தேகங்களுக்கு  இதில் பதில் உள்ளது

ஒரு இயக்கத்தாரின் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயமே அவப்பெயரை சுமக்க இயலாது

*தப்லீக் ஜமாத் இயக்கம் எப்பொழுது யாரால் ஆரம்பிக்கப்பட்டது?*

தப்லீக் ஜமாத் என்ற இயக்கம் 1927ஆம் ஆண்டு இல்யாஸ்  காந்தலவி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது . 

*முஸ்லிம்கள் அனைவரும் இந்த இயக்கத்தின்  உறுப்பினர்களா?*

ஒருவர் முஸ்லிமாக இருப்பதற்கும் தப்லீக் இயக்கத்தின் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

இஸ்லாமிய பெயர்களில் பல இயக்கங்கள் தோன்றியுள்ளன அவை ஒரு தனிப்பட்ட மனிதரால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் . காலப்போக்கில் பல இயக்கங்கள் சிதைந்து போயிருக்கின்றன அது போன்றே இதுவும் ஒரு இயக்கம் அவ்வளவுதான்

*முஸ்லிம்கள் அனைவரும் தப்லிக் இயக்கத்தை ஆதரிக்கிறார்களா?*

பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்த இயக்கத்தை ஆரம்பம் முதலே கொள்கை அளவில் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள் 

இந்த இயக்கத்திற்கு எதிராக இஸ்லாமிய அறிஞர்களால் புத்தகங்கள் மார்க்கத் தீர்ப்புகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுள்ளன தற்காலத்தில் சமூக ஊடகங்களில் வீடியோ களிலும் இதைக் காண முடியும் . இணைய தேடு தளங்களில் தப்லீக் ஜமாத் என்று தேடினால் தப்லீக் இயக்கத்திற்கு எதிரான பல விவாதங்கள் நடைபெற்றதை காண முடியும்.
ஆங்காங்கே  ஆதரவாளர்களும் உள்ளார்கள் .

*முஸ்லிம்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இந்த இயக்கம் உள்ளதா?*

இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை ,மலேசியா இந்தோனேஷியா, வங்கதேசம் போன்ற பல நாடுகளில் இதன் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் 

ஆனால்  அரபு நாடுகளில் குறிப்பாக  வளைகுடா நாடுகளில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அங்கு இவர்களின் புத்தகங்கள் வாசிக்க தடை
இந்த இயக்க உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்ய முடியாது பள்ளிகளில் தங்க
முடியாது


*தப்லீக் இயக்கத்தின் நோக்கம் என்ன?*

அதன் நிறுவனத் தலைவர் இல்யாஸ்  காந்தலவி அவர்களே கூறுகிறார் ...

இதை பாமர மக்கள் தொழுகைக்கு முஸ்லிம்களை அழைக்கும் இயக்கம் என தவறாக புரிந்து கொண்டார்கள் ஆனால் ஒரு புதிய கூட்டத்தை உருவாக்குவதே எனது இயக்கத்தின் நோக்கமாகும் 

*தப்லீக் , ஜமாத் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?*

தப்லீக் - எத்திவைத்தல்  
ஜமாத் - கூட்டம்

புதிய செய்தி ஒன்றை பிறருக்கு தெரிவிப்பதற்கு தப்லீக் என்று சொல்லப்படும்
இல்யாஸ் காந்தலவி என்பவருடைய புதிய கருத்துக்களை, திட்டங்களை மக்களுக்கு தெரிவிப்பதற்கு  தப்லீக் ஜமாத் எத்தி வைக்கும் கூட்டம் என்று அவர்கள் பெயர் வைத்துள்ளார்கள்

*தப்லிக் இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் என்ன?*

நிலையான எந்தக் கோட்பாடும் இல்லாமல் சந்தர்ப்பத்திற்கு என்றவாறு பச்சோந்தி தனமாக கொள்கைகள் மாற்றப்படுகின்றன

வரும் ஆனால் வராது என்ற தொனியிலும் கொள்கைகள் சொல்லப்பட்டுள்ளன

முஸ்லிம்கள் காலம் தொட்டு பின்பற்றி வரும் பல  செயல்பாடுகளை எதிர்ப்பதாக இவர்களின் கொள்கை உள்ளது

அவற்றில் சில...

மௌலித் மீலாத் கூடாது அது கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பானது

ஞானிகளின் தர்ஹா அடக்க இடங்களுக்கு சென்று முறையிட கூடாது

அது சிலை வணக்கத்திற்கு ஒப்பானது 

மறைந்தவர்களுக்கு நினைவு நாளன்று குர்ஆன் ஓதுவது கூடாது 

இவை அனைத்தும் பிறமத வணக்கங்களுக்கு ஒப்பானவை எனவே இவற்றை  முஸ்லிம் செய்யக் கூடாது எனக் கூறுகின்றனர்

இதுபோன்ற புதிய கருத்துக்களால் முஸ்லிம்கள் மத்தியில் பலமான எதிர்ப்புகள் உண்டாகின


*தப்லீக் இயக்கத்தின் செயல்பாடுகள் என்ன?*

இவர்கள் கொள்கையை தொலைதூர திட்டங்களை வகுத்து படிப்படியாக சாதுர்யமான முறையில்  நடைமுறை படுகின்றார்கள்

கஸ்து ஜோடு சில்லா என்று உரூது பெயரில் சிலதை செய்கிறார்கள்

பொதுவாக முஸ்லிம்கள் பள்ளிகளில்  பாங்கு என்ற அழைப்பின் மூலம் தொழுகைக்காக அழைக்கின்றார்கள் முஸ்லிம்கள் எந்த பள்ளியிலும் தொழலாம்
 
ஆனால் இவர்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி தெரு வழிகளில் சென்று மக்களை இவர்களது இயக்கங்கள் செயல்படும் பள்ளிக்கு மாத்திரம் தொழுகைக்கு வருமாறு அழைக்கின்றார்கள் அங்கு தொழுகை முடிந்ததும் அவர்களின் தஃலீம் நூலை வாசிக்க பயிற்சி கொடுக்கின்றார்கள் 

தஃலீம் புத்தக வாசிப்பில் கவரப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து மூளைச்சலவை செய்து
மூன்று நாட்கள் பிற ஊர்களுக்கு பயிற்சிக்காக கூட்டி செல்கிறார்கள்

அதில் மூளைச்சலவை செய்து நாற்பது நாட்கள் 
வேறு மாவட்டங்களுக்கு பயிற்சிக்காக அழைத்துச் செல்கிறார்கள் 

நபர்களின் ஈடுபாடு தக்கவாறு படிப்படியாக இயக்க  வெறியை புகுத்துகிறார்கள்

ஈடுபாடு அதிகம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து மூன்று மாதம் ஒரு வருடம் என்று பிற மாநிலங்களுக்கு நாடுகளுக்கு  கூட்டி செல்கிறார்கள்

இதில் தீவிரம் அடைந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் தவ்ஹீத் என்ற இயக்கங்கள் ஆரம்பித்து செயல்படுகிறார்கள் 

*இவர்களுக்கு மாநாடு பொது கூட்டம் ஏதும் நடத்துவது உண்டா?*

இஜ்திமா என்ற பெயரில் ஆண்டு தோறும் இயக்க மாநாடு நடத்துகின்றனர்

அது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பகுதியில் நடத்தப்படுகின்றது அதில் பல பகுதியிலிருந்தும் இயக்க உறுப்பினர்கள் ஒன்று சேருகிறார்கள் 

பெரிய திடலில் பிரம்மாண்ட பந்தல் போட்டு வியாபாரக் கடைகள் வைத்து கண்காட்சி போன்று அமைக்கிறார்கள்
சுற்றுவட்டார பொது மக்களையும் பங்குபெற  செய்கின்றார்கள் அதில் எந்த கருத்து முரண்பாடான தகவல்கள் இயக்கக் கொள்கைகள் இல்லாதவாறு பிரச்சாரம் செய்கின்றார்கள் 

இரண்டு மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் எந்த தீர்மானமும் செய்தியும் மக்களுக்கு சொல்லப்படாது 

கூடி கலைகின்ற கூட்டத்தை  பெருமை பேசி பிற மக்களை தங்களின் இயக்கத்தின் பால் கவர முயற்சி செய்கின்றார்கள் .

*தப்லீக் ஜமாத் இயக்கத்தின் தலைமை அலுவலகம் எங்கு உள்ளது?*

டெல்லியில் பிரபல்யமான சூஃபி ஞானி நிஜாமுதீன் அவர்களது தர்ஹா அமைந்துள்ளது அந்தப் பகுதியே ஹஜ்ரத் நிஜாமுதீன் என்று அழைக்கப்படுகின்றது

அவர்களது தர்காவின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்து தப்லீக் இயக்கத்தின் தலைமைப் பீடம் கட்டப்பட்டுள்ளது அதை அந்த இயக்கத்தினர் மார்க்கஸ் என்று அழைக்கின்றார்கள்

*மர்க்கஸ் அபகரிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என கூற காரணம் என்ன?*

வரலாற்று ஆவணங்களின் படி இப்போது மர்க்கஸ் கட்டப்பட்டுள்ள இடம் பூர்வமாக தர்காவிற்கு சொந்தமானது மகானின் சமாதிக்கு வருபவர்கள் பயன்படுத்திய இடமே அது 

சூஃபி மகானின் கொள்கை கோட்பாடுகளுக்கு நேர் எதிரான கொள்கையை பின்பற்றும் தப்லீக் ஜமாத் இயக்கவாதிகள் தர்கா நிலத்தை உரிமை கொண்டாட முடியாது அது வக்ஃப் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானது

மார்க்கஸில்  வரும் எந்த தப்லீக் ஜமாஅத் இயக்க உறுப்பினர்களும் சமாதியை தரிசிக்க வருவதில்லை 

பெரும்பான்மை முஸ்லீம்கள் சூஃபி ஞானி ஹஸ்ரத் நிஜாமுதீன் அவர்களின் தர்காவிற்கு தரிசிப்பதற்காக வருகை தருபவர்கள் ஆனால் அவர்களில் யாரும் இந்த மர்க்கஸ் பக்கம் செல்வதே இல்லை 

*மர்க்கஸ் கிளைகள் உள்ளனவா?*

ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரியமான முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் கைப்பற்றப்பட்டு
பள்ளியின் பழைய பெயர்கள் மாற்றப்படும் பிறகு அந்தப் பள்ளிகள் தப்லீக் ஜமாத்தின் மையமாக அறிவிக்கப்பட்டும் .  பின்பு டெல்லி மர்கஸில் நேரடி கட்டுப்பாட்டில் கிளை மர்கஸாக  செயல்படும்

*மர்கஸில் என்ன நடைபெறும்?*

அந்தப் பள்ளியில் தப்லீக் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் சாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்  அவர்கள் இந்த பள்ளிகளில் பல நாட்கள் தங்கி சமைத்து உண்டு விடுதிகள் போன்று பயன்படுத்துவார்கள்

அங்கிருப்பவர்கள் வெளி ஊர்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால் யார் தங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் உள்ளூர்வாசிகளுக்கு தெரியாது . இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன இவர்கள் மூலம் ஏதாவது தவறுகள் நிகழ்ந்தால் அடையாளம் காண முடியாது

அவரவர் பகுதியில் உள்ளவர்களை பிரச்சாரத்தில் பயன்படுத்தினாள் முக அடையாளங்கள் தெரிய வாய்ப்புள்ளது ஆனால் அவ்வாறு செய்வதில்லை

அந்த வெளியூர் ஆட்களுக்கு வழிகாட்ட மட்டுமே உள்ளூர்வாசிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்

*இவர்கள் ஊரு விட்டு ஊரு செல்வதன் காரணம் என்ன?*

ஊரு விட்டு ஊரு செல்வது மார்க்கத்தை படிக்க என்று  சொல்லப்படுகின்றது 

இது இவர்கள் விஷயத்தில் பொருந்தாத வேடிக்கையான காரணமாக இருக்கின்றது 

உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு குழு மார்க்கம் படிக்க திருச்சி செல்கின்றது  அதே திருச்சியிலிருந்து வேறு ஒரு குழு மார்க்கம் படிக்க சென்னைக்கு வருகின்றது வினோதமாக இருக்கின்றது

சென்னையில் உள்ளவர்கள் சென்னையிலேயே மார்க்கம் படிக்கலாமே அது போன்று திருச்சியில் உள்ளவர்கள் திருச்சி மக்களுக்கு மார்க்கம் படித்துக் கொடுக்கலாமே

சிலர் இலங்கையில் இருந்து இந்தியா வருகிறார்கள் இந்தியாவில் இருப்பவர்கள் இலங்கைக்குச் செல்கின்றார்கள் எதற்காக என்று புரியவில்லை 

ஒரு நாட்டை இடத்தை சுற்றிப் பார்க்க செல்கின்றோம் அல்லது ஒரு இடத்தை தரிசிக்கச் சென்றோம் என்றால் அந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் அதற்காக சொல்வதில்லை ஏதோ ஒரு உள்நோக்கம் உள்ளது

வெளிநாடுகளில் இருந்து  சுற்றுலா விசாவில் வந்து பிரச்சாரம் பண்ணுவது அல்லது பயில்வது சட்டவிரோதமாகும் இதை சர்வசாதாரணமாக மீறுகிறார்கள்

*வெளியூர்களில் தங்குமிடங்கள் உணவு தேவைக்கு
 என்ன செய்கிறார்கள்?*

பள்ளிவாசல்களை விடுதிகளை போன்று பாவித்து
தங்கி சமைத்து உண்கின்றார்கள் இது அனுமதிக்கப்பட முடியாத ஒன்று இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன 

அதில் அறிமுகம் இல்லாதவர்களும் வெளிநாட்டவரும் தங்குவதால் அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உள்ளூர் வாசிகள் பொறுப்பேற்க வேண்டி உள்ளது

முஸ்லிம்களால் இது சம்பந்தமாக பல புகார்கள் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ள

*இவர்களின் தலைவர் யார் ?*

அவர்களின் தலைவர் அமீர் சாப் என்று அவர்களால் அழைக்கப்படுகிறார் ஊருக்கு  மாநிலத்துக்கு நாட்டிற்கு என அமீர்கள்  நியமிக்கப்படுகின்றார்கள்

*நிதி நிர்வாகம் மற்றும் தகவல் தொடர்பு எப்படி?*

இவர்கள் எந்த ஊடகங்களையும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவதில்லை ஒருவருக்கொருவர் வாய்மொழி மூலமாகவே கூட்டங்கள் பற்றிய விவரங்களை பரப்புகிறார்கள்
எனவே இவர்களுடைய செயல்பாடுகள் மர்மமாகவே உள்ளது

நிதி நிர்வாகமும் மூடலாகவே இருக்கின்றது எங்கிருந்து எப்படி வருகின்றது என்பதை யாரிடமும் தெரிவிப்பதில்லை ஆனால் அவர்களுக்குள் ஏதோ ஒரு பரிமாற்றத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்தும் உள்ளுரிலும் ரகசியமாக நிதி திரட்டப்படுகிறது

தங்கள் இயக்க வாதிகளுக்கு மட்டும் தொழில் தொடங்க பணம் உதவி செய்கின்றார்கள் இதன் மூலம் அவர்களை தங்கள் இயக்கத்தில் தக்க வைத்துக் கொள்கின்றார்கள்

புதிதாக மர்க்கஸ் கட்டுவதற்கு டெல்லி தலைமை மர்கஸில் இருந்து  நிதி உதவி செய்கிறார்கள்

*முஸ்லிம்கள் தப்லீக் இயக்கத்தால் எந்த விதத்தில் பாதிக்கப்படுகின்றார்கள்?*

பல பாரம்பரிய பள்ளிவாசல்கள் இவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன

இதை எதிர்த்த பல பள்ளிவாசல் நிர்வாகிகள் கடுமையான நிர்பந்தத்திற்கு உள்ளாகி பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளார்கள்.

இளைஞர்கள் படிப்பு மற்றும் வேலைகளை உதறிவிட்டு ஊர் சுற்ற மூளைச்சலவை செய்யப் படுகிறார்கள் இதனால் அவர்களுடைய குடும்பத்தினர் வருமானத்தை இழந்து பாதிக்கப்படுகிறார்கள்

அமல்களின் சிறப்பு என்ற ஒரு புத்தகம் தப்லிக் ஜமாஅத்தின் புனித நூலாக போற்றப்படுகிறது அதை அந்த இயக்கவாதிகள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் அனைத்து பள்ளிவாசல்களிலும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டும் என நிர்பந்தித்து வாசிக்க வைக்கின்றார்கள் 

தொழுகைக்கு வருபவர்களை கட்டாயப்படுத்தி அந்தப் புத்தக வாசிப்பை கேட்க செய்கின்றார்கள்

பள்ளிகளில் காலங்காலமாக வக்ஃப் படி நடைபெற்றுவந்த மௌலித் மீலாத் ஸலவாத் நிகழ்வுகளை படிப்படியாக குறைத்து இறுதியில்  தடை செய்கிறார்கள்

பெரும்பாலும் மகான்களின் தர்ஹாக்களுக்கு அருகில் பள்ளிவாசல்கள் கட்டப்படும்
தர்ஹாவிற்கு தரிசிக்க வருபவர்கள் இறைவனை வழிபடும் நேரத்தில் அந்தப் பள்ளிவாசல்களில் தொழுவார்கள். அந்தப் பள்ளிவாசல்கள் மகான்களின் பெயர் சூட்டப்பட்டு இருக்கும்

இந்த வளமையை மாற்றி
மகான்களின் அடக்க இடங்களை பூட்டி வைத்து அதை தரிசிக்க விடாமல் பல தடைகளை ஏற்படுத்துகிறார்கள். பல இடங்களில் மஹான்களின் சமாதி அறை பொருட்களைப் பாதுகாக்கும் அறையாக மாற்றப்படுகின்றது காலப்போக்கில் படிப்படியாக பள்ளிவாசல்களை விரிவாக்கம் செய்கின்றோம் என்ற பெயரில் மகான்களின் அடக்க விடங்களை  உடைத்து அடையாளம் தெரியாமல் ஆக்கி விடுகின்றார்கள்

புதுப்பிக்கப்பட்ட அந்த பள்ளிவாசல்கள் பெயர் மாற்றம் செய்யபடும் ஒருவருடைய வீட்டை அபகரித்து தன்னுடைய வீடாக உரிமை கொண்டாடும் இதை எந்த விதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது

*சுதந்திர நாட்டில் மக்கள் தாங்கள் விரும்பிய மத நம்பிக்கையில் வாழ உரிமை உள்ளது ஆனால் ஒருவருடைய சொத்தை அபகரித்து மற்றொருவர் சொந்தம் கொண்டாட இயலாது. எந்தக் கொள்கைக்காக ஒரு சொத்து எதற்காக அன்பளிப்புச் செய்யப்பட்டது அதே நோக்கத்திற்காக மட்டுமே அந்தச் சொத்து பயன்படுத்தப்பட வேண்டும் அதை நிர்வகிக்கும் நிர்வாகிகளும் அதே கொள்கை கோட்பாடு உடையவராக இருக்க வேண்டும் என்பதே பாரம்பரிய முஸ்லிம்களின் நிலைப்பாடு*