பின்னூரியார் காதில் பூச்சுற்றுகிறார்!
------------------------------------
"யார் இந்த இஸ்மாயீல் தேவ் பந்தி?"
என்ற ஒரு ஆக்கம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அனைவரும் அறிவர்.
இதற்கு மேற்படி தேவ் பந்தியின் சகலன் மௌலவி பின்னூரி அவர்கள் பதில் கூறியுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளவற்றிற்கு சில விளக்கங்களை பதிவிட்டுள்ளேன்.
அதைப் படியுங்கள்.!
இஸ்மாயீல் தேவ் பந்திக்கு கறாமத் இருந்தது என்று கூறுவது மிகைபட்ட கூற்று என்றும் அதற்கும் இஸ்மாயீல் தேவ் பந்திக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்றும் இவர்(இஸ்மாயீல் தேவ் பந்தியின் சகலன்) கூறுவது உண்மை!
இல்லாத ஒன்றை இருபபதாக முட்டாள்தனமாக
இவருக்குக் கூறுகின்றனர்
என்றுதான் குற்றம் சாட்டுபவரும் கூறுகின்றார்.
காரணம்,
அவரிடம் ஒரு வலிக்குரிய எந்த ஒரு அடையாளமும் துளியும் கிடையாது.
வழிகேடான இயக்கத்திலிருப்பவரின் அமல்களுக்கே அங்கீகாரம் இல்லாமலிருக்கையில் விலாயத், கறாமத் என்பது எப்படி சாத்தியமாகும்.?
இவையெல்லாம் வழிகேடர்களுக்கு எட்டாக்கனியாகும். மௌலவி!
இவர் ஜிஷ்தியா தரீக்கா வின் ஷைகாக இருந்தார் என்று இவர்கூறுவதும் அப்பட்டமான நயவஞ்சகப் பேச்சாகும். ஏனெனில்,
தப்லீக் கின் முழுத் திட்டம் வெற்றியடைந்தால் அப்போதும் அவர்கள் 700ஆண்டுகளுக்கு முன்னவர்கள் போன்று மீண்டுவிடுவார்கள் என்று தப்லீக் கின் நிறுவனர் மௌலவி இல்யாஸ் கூறுவதாக மல்பூஜாத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதன்படி,
தப்லீக் கின் அஸல் கொள்கையைப் பின்பற்றுவோர் இல்யாஸின் கூற்றுப்படி,ஜிஷ்தியா தரீக்கா தோன்றுவதற்கு முன்னுள்ள கொள்கை சார்ந்தவர்களாக வே இருப்பார்கள்.
அப்படியிருக்க எப்படி தப்லீக் வாதிகள் ஜிஷ்தியா தரீக்கா பற்றிப் பேசமுடியும். ?
மௌலவி இல்யாஸ் ஙரீபுன் நவாஸ்காஜா முயீ னுத்தீன் ஜிஷ்த்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களையே அங்கீகரிக்காமலிருக்கும் போது எப்படி தப்லீக் முல்லாக்கள் ஜிஷ்தியா ஷைகுமார்களானார்கள்.?
19வயது ள்ள ஒரு பெண்ணை அவளின் தந்தைக்குத் தெரியாமல் திருமணம் முடித்தார் என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு அதை பழுப்பு முயற்சிக்கின்றார்.
விதவையைத் திருமணம் முடித்துக் கொடுப்பதில் அவளின் விருப்பம் முக்கியமாகும். அவள் விரும்பும் ஒருவரை அவளின் தந்தை அல்லது தந்தையின் தந்தை விரும்பா விட்டால் அவர்கள் திருமணத்திலிருந்துஒதுங்கிய வர்களாகக் கருதப்படுவர். இச்சந்தர்ப்பத்தில் காழி திருமணத்தை நடத்தி வைப்பார். இதுதான் சட்டம்.
அப்படியிருக்க,
விதவைக்கு தந்தைதான் வலியாக இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை என்பது பிழையான வாதமாகும். தந்தையோ, தந்தையின் தந்தையோ விலகிக் கொள்ளும் பட்சத்தில் தான் காளி வலியாக முடியும். அப்படியிருக்க விதவைக்கு தந்தை வலியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லைஎன்று எப்படிக் கூற முடியும் ?
இவரின் கூற்றுப்படி,
இத்திருமணம் தந்தையின் விருப்பமில்லாமல் நடந்தது என்பதை ஒப்புக் கொள்கின்றார்.
அதைத்தானே
"யார் இந்த இஸ்மாயீல் தேவ் பந்தி?" என்று ஆக்கத்திலும்கூறுகிறார்.
அதாவது இவர் கூறுவது போன்று இத்திருமணத் தில் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது!
அது என்ன வரலாறு?
அதுதான் கடத்தல்!
தப்லீக் பற்றி கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில்லாத அபாண்டம் என்கின்றார்.
இவர்கூறுவதுதான் அபாண்டமாகும்.
"தப்லீக் பற்றிய குற்றச்சாட்டுக்களும் தக்க பதிலும்" என்ற
கீரனூரியாரின புத்தகத்தை
இவர் அபாண்டத்தை ஒப்புக்கொண்ட" முட்டாளின் விளக்கம்" என்றா கூறுவார்.?
அப்பாவிகளின் காதுக்கு "பூ"ச்சுற்றுவது போன்று எல்லோருக்கும் பூச்சுற்றமுடியாது.
தப்லீக்கை தஃவா அமைப்பு என்று கூறுகின்றாரே!
அங்கு தஃவத்என்று கூறுவது சாப்பாட்டு தஃவத்துத்தான்.
தப்லீக்ஜமாஅதினர் எழுபது ஆண்டுகளாக செக்கு மாடுகளைப் போல் ஒரு வட்டத்துக்குள் ளே சுற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
மூளைச்சலவை மட்டுமே தப்லீக் கில் நடக்கின்றது.
மூளைச்சலவை வைத்தான் தப்லீக் கின் பரிபாஷை யில்
"தஃவத்". என்கின்றனர்.
தப்லீக் கில் ஈடுபடும் முல்லாக்களும் அமீர்களும்
பிரபலங்களும் வாழும் போது ஆயிரம் கறாமாத் அவர்கள் பேரில் புகழ்ந்து தள்ளப்பட்டன.. ஆனால்,
மரணித்த பின்னால் அவர்கள் முகவரி இல்லாதவர்களாகி விடுவர்.
அவர்களை நினைத்து எவரும் பாத்திஹா ஓதமாட்டார்கள். அவர்களை எவரும் ஸியாரத் செய்ய மாட்டார்கள்.
மௌலவி இல்யாஸ் டில்லி மர்கஸில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கு செல்கின்ற எவரும் அவர் கப்றைத்தரிசித்து துஆச்செய்வதில்லை.
ஆனால்,
வாழ்நாள் பூறாக தப்லீக் கை எதிர்தவர்களின் கப்றுகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.!
அறிமுகமில்லாதவர்களும்
தேடிவந்து துஆச்செய்து விட்டுச் செல்கின்றனர்.
தப்லீக் கில் பேரோடும் புகழோடும் வாழ்ந்தவர்களின்கப்றுகள் இருண்டு
கிடக்கின்றது.
அவர்களை புகழ்ந்தவர்கள் மறந்து விட்டனர்.
ஆனால்,
தப்லீக் கை எதிர்த்தவர்களின் கப்றுகள் மக்களின் துஆவினாலும், வெளிச்சத்தாலும் இலங்கிக் கொண்டிருக்கின்றன.
எந்த நேரமும் நறுமணம் கமழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இதுதான் சத்தியத்திற்கும்,
அசத்தியத்திற்கும் அல்லாஹுத்தஆலா வழங்குகின்ற சான்றாகும்.
இதைப் புரிந்து கொண்டு வழி கெட்ட தப்புலீக்குக்குகளிலிருந்து உடனே தௌபாச் செய்து மீள முயலுங்கள்.!
தவறினால் கப்றிலும் மறுமையிலும் முகவரி இல்லாமல் போய்விடும்.