வஸீலா (01) - அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّـهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّـهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّـهَ تَوَّابًا رَّحِيمًاஅவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும்,மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.(ஸூரா அன்-னிஸா :64)மூமின்கள் தங்களது பாவங்களை போக்கிக் கொள்ள பல வழிகளில் இறைவனிடத்தில் பாவ மன்னிப்பு தேடலாம். ஆனால் அவற்றில் மிக உன்னதமான வழியை இந்த ஆயத்தின் மூலமாக அல்லாஹ் நமக்குக் காட்டித்தந்துள்ளான். அதாவது எவரொருவர் பாவம் செய்கிறாரோ அவர் ரஸுலுல்லாஹ்வை அணுக வேண்டும்; அவரின் ஷபாஅத்தை வேண்ட வேண்டும். அதன் மூலம் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய வாய்ப்பினை அவர் அதிகரித்துக் கொள்ளலாம். இதனையே மேற்கூறிய இறைவசனத்தின் மூலம் அல்லாஹ் மிகத் தெளிவாக மூமின்களுக்கு கூறியுள்ளான்.ரஸுலுல்லாஹ் உயிருடன் இருக்கும்போது மட்டுமே மேற்சொன்ன இறைவசனம் செல்லுபடியாகும் என சிலர் கருதலாம். ஆனால் இறை நேசர்களுக்கு இறப்பு என்பது அவர்கள் மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு தருணமல்ல; அவர்கள் தமது கப்ரிலே உயிருடன் உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اﷲِ صلي الله عليه وآله وسلم : الْأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُوْرِهِمْ يُصَلُّوْنَரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவரகள் கூறினார்கள்:"நபிமார்கள் தமது கப்ரிலே உயிருடன் உள்ளனர். அவர்கள் தொழுது கொண்டுள்ளனர்" பைஹகீயின் ஹயாத்துல் அன்பியா, முஸ்னத் அபீ யஃலா ► இந்த ஹதீத் ஸஹீஹ் என இமாம் பைஹகி (رحمه الله) கூறியதாக இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (رحمه الله) அவர்கள் தமது ஃபத்ஹ் அல்-பாரியில் தெரிவிக்கிறார்.மேலும் தப்ஸீருடைய இமாம்கள் இந்த குர்ஆன் வசனத்தை (4:64) ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவரகளுடைய வாழ் நாளில் மட்டும் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒன்றாக கருதவில்லை. மாறாக அவர்களுடைய வபாத்தின் பின் அவர்களுடைய கப்ர் வாழ்க்கையிலும் இவ்வசனம் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒன்று என்பதே இமாம்களின் நம்பிக்கையாக இருந்தது. இமாம் இப்னு கதீர் (رحمه الله) தமது தப்ஸீரிலே இந்த ஆயத்துக்கு விளக்கமளிக்கையில் பின்வரும் உத்பீயின் சம்பவத்தை குறிப்பிடுகிறார்:وقد ذكر جماعة منهم الشيخ أبو منصور الصباغ في كتابه الشامل الحكاية المشهورة عن العتبي قال كنت جالسا عند قبر النبي صلى الله عليه وسلم فجاء أعرابي فقال السلام عليك يا رسول الله سمعت الله يقول ولو أنهم إذ ظلموا أنفسهم جاؤك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقد جئتك مستغفرا لذنبي مستشفعا بك إلى ربي ثم أنشأ يقول يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم ثم انصرف الأعرابي فغلبتني عيني فرأيت النبي صلى الله عليه وآله وسلم في النوم فقال يا عتبي إلحق الأعرابي فبشره أن الله قد غفر لهபலர் இச்சம்பவத்தை அறிவித்துள்ளனர். அவர்களில் ஒருவரான அஷ்-ஷெய்கு அபூ மன்ஸூர் அஸ்-ஸப்பாங் தனது நூலான அஷ்-ஷாமிலில் பின்வரும் பிரபலமான ஒரு சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.உத்பீ கூறுகிறார்:"நான் நாயகம் (صلى الله عليه وسلم) அவர்களின் கப்ர் அருகே அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வருகை தந்த அரபி ஒருவர்:"அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ் ,"அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்." (4:64) என கூறுவதாக நான் கேட்டிருக்கிறேன்.ஆகையால் நான் உங்களிடம் எனது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும், என்னுடைய இறைவனிடத்தில் உங்களுடைய ஷபாஅத்தை வேண்டியவனாகவும் வந்துள்ளேன்" என்று கூறினார்.பின்பு அந்த அரபி (ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) வை புகழ்ந்து சில கவி வரிகளை பாடிவிட்டு) சென்று விட்டார்.இச்சம்பவம் நடந்து முடியும்போது நான் உறங்கிவிட்டேன். அப்போது ரசூல் (صلى الله عليه وسلم) அவர்களை கனவில் கண்டேன். நபியவர்கள் என்னை நோக்கி "அந்த அரபியியை சந்தித்து அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்ற நற்செய்தியை எத்தி வையுங்கள்" என்று கூறினார்."(தப்ஸீர் இப்னு கதீர்)இமாம் இப்னு கதீர் (رحمه الله), ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) வபாத்தான பின்பும் அவரிடம் அவரின் ஷபாஅத்தை வேண்டலாம் என மேலே தெளிவாக கூறியுள்ளதை அவதானிக்கவும். ஸூரா அன்-னிஸா 64ம் ஆயத்துக்கு விளக்கமாக உத்பீயின் இந்த சம்பவத்தை அல்லது அதற்கு ஒத்த நிகழ்வுகளை தமது தப்ஸீர்களில் குறிப்பிட்ட இமாம்களில் சிலர்:இமாம் இப்னு கதீர் (رحمه الله) தமது தப்ஸீருல் குர்ஆனில் கரீம் இமாம் த’லாபி (رحمه الله) தமது தப்ஸீரில் இமாம் நஸஃபி. (رحمه الله) தமது தப்ஸீரில் இமாம் அல்-குர்தூபி (رحمه الله) தமது அல்-ஜாமிஉ லில் அஹ்காமில் குர்ஆன் இமாம் அபூ ஹய்யான் அல்-அன்தலூஸி (رحمه الله) தமது தப்ஸீரில்ஒரு ஆயத்துக்கு ஒரு குறித்த இமாமின் விளக்கவுரை என்பது அவரது சொந்த அகீதாவின் பிரதிபலிப்பு. அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாவை சேர்ந்த இமாம்கள் இந்த ஆயத்தை (4:64) எவ்வண்ணம் விளங்கி உள்ளனர் என இதிலிருந்து தெளிவு பெறலாம்.இந்த ஆயத்தானது பாவம் செய்கிற அத்தனை மனிதர்களுக்கும்எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதை “உத்பீயின் சம்பவத்தை” அல்லது அதற்கு ஒத்த நிகழ்வுகளை இந்த ஆயத்துக்கு விளக்கமாக தலை சிறந்த இமாம்கள் குறிப்பிட்டிருப்பதில் இருந்து விளங்கி கொள்ளலாம்.இப்னு கதீர் (رحمه الله) இது மிகவும் பிரபல்யமான ஒரு சம்பவம் என கூறுகிறார்.ஷிர்க்கை ஆதரிக்கும் ஒரு சம்பவம் எப்படி இஸ்லாம் வேரூன்றி இருந்த அந்த பொற்காலத்தில் பிரசித்தம் அடைந்தது? இந்த தப்சீர்கள் தவிர உத்பீயின் சம்பவம் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாவை சேர்ந்த வேறு பல பிரபல இமாம்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில:இமாம் நவவி (رحمه الله) இன் அத்கார்இமாம் இப்னு குதாமா (رحمه الله) இன் முங்னிஇமாம் சுயூதீ (رحمه الله) இன் தப்ஸீர் துர்ருல் மன்தூர்இமாம் இப்னு அஸாகீர் (رحمه الله) இன் தாரீக்இமாம் தகியுத்தீன் அஸ்-ஸுப்கீ (رحمه الله) இன் ஷிபாஉஸ் ஸிகாம்இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ (رحمه الله) இன் அல்-ஜவ்ஹர் இமாம் நவவி (رحمه الله) அவர்கள் சம்பவத்தை “ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم)வின் கப்ரை தரிசித்தலும் அதன் திக்ருகளும் ” என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ளார்.மேலும் இமாம் இப்னு குதாமா (رحمه الله) முங்னியில் இச்சம்பவத்தை "நபியின் கப்ரை தரிசித்தல் " எனும் பாடத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்.எல்லாம் வல்ல இறைவன் அவனின் திருத்தூதரின் ஷபாத் மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஈடேற்றம் அடையும் கூட்டத்தில் எம்மை ஆக்கி வைப்பானாக!
வஸீலா (02) ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களுக்கு அல்லாஹ் அவரின் மவ்த்திற்கு பின் கொடுத்திருக்கும் சங்கை
الكتب » سنن الدارمي » المقدمة » باب ما أكرم الله تعالى نبيه صلى الله عليه وسلم بعد موته حدثنا أبو النعمان حدثنا سعيد بن زيد حدثنا عمرو بن مالك النكري حدثنا أبو الجوزاء أوس بن عبد الله قال قحط أهل المدينة قحطا شديدا فشكوا إلى عائشة فقالت انظروا قبر النبي صلى الله عليه وسلم فاجعلوا منه كوى إلى السماء حتى لا يكون بينه وبين السماء سقف قال ففعلوا فمطرنا مطرا حتى نبت العشب وسمنت الإبل حتى تفتقت من الشحم فسمي عام الفتقஅபூ அல்-ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்:''மதீனா மக்கள் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் ஆயிஷா (رضي الله عنها) அவர்களிடம் (தங்களின் நிலையை) முறையிட்டார்கள்: அதற்கு ஆயிஷா(رضي الله عنها) அவர்கள் நபி (صلى الله عليه وسلم) அவர்களின் கப்ருக்குச் சென்று கப்ருக்கும் வானத்திற்கும் இடையில் எந்தவொரு திரையும் இல்லாதவாறு வானத்தை நோக்கி ஒரு வழியை (துளையை) ஏற்படுத்துங்கள்என்று சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் பெரும் மழை பெய்தது (எந்தளவுக்கென்றால்) புற்கள் (எங்கும்) வளர்ந்ததுடன் ஒட்டகங்கள் அதிக கொழுப்பினால் வெடித்து விடும் அளவிற்கு கொழுத்தன. எனவே அந்த ஆண்டு “ஆமுல் ஃபத்க்” என பெயரிடப்பட்டது.ஸுனன் தாரிமிஇந்த ஹதீத் பின்வரும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இமாம் இப்னு அல்-ஜவ்ஸீ (رحمه الله)இன் அல்-வஃபாஇமாம் தகியுத்தீன் அல்-சுப்கீ (رحمه الله)இன் ஷிபா அல்-ஷிகாம்இமாம் கஸ்தலானி (رحمه الله) இன் மவாஹிப்இந்த ஹதீதை இமாம் தாரிமி (رحمه الله) அவர்கள் தமது ஸுனனிலே “ரஸுலுல்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவரின் மவ்த்திற்கு பின் கொடுத்திருக்கும் சங்கை” எனும் தலைப்பில் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஹஸன் தரத்திலமைந்த ஹதீதாகும்.உம்முல் மூமினீனான ஆய்ஷா (رضي الله عنها) அவர்களின் இஸ்லாம் நவீன தௌஹீத் வாதிகளின் இஸ்லாத்தை விட்டும் எந்தளவுக்கு வித்தியாசமானது என மேலுள்ள சம்பவத்தில் இருந்து அறியலாம். அன்னையவர்கள் கப்ரிலுள்ள ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களை வஸீலாவாக்கி மக்களை தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு ஏவினார்கள். ஆனால் நவீன தௌஹீத் வாதிகளோ இதனை ஷிர்க் என்கின்றனர்.அன்று வாழ்ந்த எந்தவொரு ஸஹாபா பெருமக்களும் இதனை எதிர்க்கவில்லை. குறைந்தபட்சம் இது ஹராம் என்றாவது கூறவில்லை.இமாம் தாரிமி அவர்கள் ஹிஜ்ரி 181ல் பிறந்தவர்கள். நேர்வழி நடந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்களில் முக்கியமானவர். இமாம் முஸ்லிமின் ஆசிரியர். அவர் இவ்வாறான ஒரு ஹதீதை தமது ஸுனனிலே "ரஸுலுல்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவரின் மவ்த்திற்கு பின் கொடுத்திருக்கும் சங்கை" எனும் தலைப்பிலே பதிவு செய்தது ஏன்? .ரஸுலுல்லாஹ் அவர்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் என்ற நவீன தௌஹீத் வாதிகளின் நம்பிக்கைக்கு இது மாற்றமாக அல்லவா உள்ளது?!இந்த தலைப்பை எதிர்த்து ஸலபுகளில் யாராவது குரல் கொடுத்தார்களா? இதனை ஷிர்க் என எதிர்த்தார்களா? அவரை கப்ர் வணங்கி என யாராவது முத்திரை குத்தினார்களா? ஆதாரம் காட்ட முடியுமா இன்றைய நவீன தௌஹீத் வாதிகளால்?ஒரு போதும் காட்ட முடியாது. மாறாக அவரை ஆரம்ப காலங்களில் ஹதீத்களை தொகுத்த ஒரு மாபெரும் இமாம் என இன்றைய நவீன தௌஹீத் வாதிகள் உட்பட அனைவரும் போற்றுகின்றனர்.எனவே நாமும் அன்னை ஆயிஷா அவர்களின் செயலை பின்பற்றி நல்லடியார்கள் மூலமாகஅல்லாஹ்விடத்தில் வஸீலா தேடி ஈடேற்றம் பெறுவோம்.
வஸீலா (03) - எவர் ஒருவர் தனது வீட்டை விட்டு...
الكتب » سنن ابن ماجه » كتاب المساجد والجماعات » باب المشي إلى الصلاةحدثنا محمد بن سعيد بن يزيد بن إبراهيم التستري حدثنا الفضل بن الموفق أبو الجهم حدثنا فضيل بن مرزوق عن عطية عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته إلى الصلاة فقال اللهم إني أسألك بحق السائلين عليك وأسألك بحق ممشاي هذا فإني لم أخرج أشرا ولا بطرا ولا رياء ولا سمعة وخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أن تعيذني من النار وأن تغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت أقبل الله عليه بوجهه واستغفر له سبعون ألف ملكரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவரகள் கூறினார்கள்:எவர் ஒருவர் தனது வீட்டை விட்டு தொழுகைக்காக (பள்ளிவாயலுக்குச்) செல்ல வெளியாகிய பின்:யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடத்தில் யாசிப்போரின் பொருட்டினால் கேட்கிறேன். இப்பாதை வழியே தொழுகைக்காக நடந்து செல்வோரின் பொருட்டினால் கேட்கிறேன். நிச்சயமாக நான் தீங்கிழைப்பவனாகவோ, பெருமை மிக்கவனாகவோ, பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகவோ அல்லது புகழுக்காகவோ, வெளியாகவில்லை. மாறாக, உனது கோபத்தை தவிர்ந்து கொள்வதற்கும் உனது திருப்பொருத்தத்தை நாடியுமே வெளியாகினேன். ஆகவே, நரகிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறும் எனது பாவங்களை மன்னிக்குமாறும் உன்னிடம் கேட்கின்றேன். நிச்சயமாக பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை,என்று கூறுகிறாரோ, அல்லாஹ் அவருக்காக (அவரது துஆவை) ஏற்றுக்கொள்வான். மேலும் அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் பாவமன்னிப்புக் கோருவார்கள்.அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல்-குத்ரீ (رضي الله عنه) நூற்கள் :- ஸுனன் இப்னு மாஜாஅமாலீ இப்னு புஷ்ரான் முஸ்னத் அஹ்மத்தபரானியின் துஆ பைஹகீயின் தஅவாத் அல்-கபீர்முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா..etcஇந்த ஹதீத் ஹஸன் தரத்திலமைந்த ஹதீதாகும். ஹதீத் கலையில் தேர்ச்சி பெற்ற 5ஹாபிழ்கள் (100,000 ஹதீதுகளை அறிவிப்பாளர் தொடருடன் மனனமிட்டோர்) இந்தஹதீதை ஹஸன் என கூறியுள்ளனர்.இமாம்ஹாபிழ் முன்திரீ (رحمه الله) - அல்-தர்கீப் வ அல்-தர்ஹீப் இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (رحمه الله) - அமாலீ அல்-அத்கார் இமாம் ஹாபிழ் இராகீ (رحمه الله) - தக்ரீஜ் அஹாதீத் அல்-இஹ்யாஉஇமாம் ஹாபிழ் திம்யாதீ (رحمه الله) - அல்-முதஜ்ஜர் அல்-ராபிஹ் இமாம் ஹாபிழ் பூசீரீ(رحمه الله) - மிஸ்பாஹ் அல்-ஸுஜாஜஹ்இப்னு குசைமா தனது ஸஹீஹிலே இந்த ஹதீதை ஸஹீஹ் என கூறுகிறார்.இப்னு புஷ்ரானின் அமாலீயில் உள்ள அறிவிப்பு: (حديث مرفوع)وَأَخْبَرَنَا دَعْلَجٌ ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ السَّاقَانِيُّ ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ ضُرَيْسٍ ، ثنا ابْنُ فَضْلٍ ، ثنا أَبِي ، عَنْ عَطِيَّةَ ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ، قَالَ : ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنْ رَجُلٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى الصَّلاةِ ، فَقَالَ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ السَّائِلِينَ عَلَيْكَ ، وَبِحَقِّ مَمْشَايَ هَذَا ، لَمْ أَخْرُجْ أَشَرًا ، وَلا بَطَرًا ، وَلا رِيَاءً ، وَلا سُمْعَةً ، خَرَجْتُ اتِّقَاءَ سَخَطِكَ ، وَابْتِغَاءَ مَرْضَاتِكَ ، وَأَسْأَلُكَ أَنْ تُعِيذَنِي مِنَ النَّارِ ، وَتَغْفِرَ لِي ذُنُوبِي ، إِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ ، إِلا وُكِّلَ بِهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَسْتَغْفِرُونَ لَهُ ، وَأَقْبَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ بِوَجْهِهِ حَتَّى يَقْضِيَ صَلاتَهُ "
வஸீலா [04] - பிலால் رضي الله عنه ரசூல்லாஹ்வின் கப்ருக்கு வருகை தந்து " அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள்.. என்று கூறினார்கள்.
دَلَائِلُ النُّبُوَّةِ لِلْبَيْهَقِيِّ >> جُمَّاعُ أَبْوَابِ غَزْوَةِ تَبُوكَ >> جُمَّاعُ أَبْوَابِ مَنْ رَأَى فِي مَنَامِهِ شَيْئًا مِنْ آثَارِ نُبُوَّةِ مُحَمَّدٍ >> بَابُ : مَا جَاءَ فِي رُؤْيَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَام(حديث موقوف) أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ ، وَأَبُو بَكْرٍ الْفَارِسِيُّ ، قَالا : أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ ، أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ الذُّهْلِيُّ ، أَخْبَرَنَا يَحْيَى ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ مَالِكٍ ، قَالَ : " أَصَابَ النَّاسَ قَحَطٌ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ , اسْتَسْقِ اللَّهَ لأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا ، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ ، فَقَالَ : ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلامَ ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْقَوْنَ ، وَقُلْ لَهُ : عَلَيْكَ الْكَيْسَ الْكَيْسَ ، فَأَتَى الرَّجُلُ عُمَرَ ، فَأَخْبَرَهُ ، فَبَكَى عُمَرُ ، ثُمَّ قَالَ : يَا رَبُّ ، مَا آلُو إِلا مَا عَجَزْتُ عَنْهُ "மாலிக் (மாலிகுத்தார் رضي الله عنه) அறிவிக்கிறார்கள்:உமர் (رضي الله عنه) அவர்களின் காலத்தில் மக்கள் பஞ்சத்தினால் கஷ்டப்பட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (பிலால் இப்னு ஹாரிஸ் அல்-முஸ்னி رضي الله عنه) ரசூல்லாஹ்வின் கப்ருக்கு வருகை தந்து" அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அழிந்துவிட்டார்கள் " என்று கூறினார்கள்..பின் ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவரகள் (அந்த மனிதரின்) கனவில் வந்து " உமரிடம் சென்று (எனது) சலாத்தை கூறுங்கள்" என்றும் இன்னும் "நீங்கள் (மக்கள்) மழை பொழிவிக்கப்படுவீரகள் (எனவும்), நீங்கள் (உமர்) விவேகமாக நடந்து கொள்ளுங்கள், நீங்கள் விவேகமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறுங்கள்" எனக் கூறினார்.(பின்) அந்த மனிதர் உமர் (رضي الله عنه) அவர்களிடம் சென்று இதனை அறிவித்தார். (இதனை கேட்ட) உமர் (رضي الله عنه) அழுதார்கள். பிறகு "என்னுடைய இரட்சகனே! எனது சக்திக்கு அப்பாற்பட்டதை தவிர நான் எதையும் முயற்சி செய்யாமலில்லை" என கூறினார்கள். ஆதாரம்:- இமாம் பைஹகீ (رحمه الله)யின் தலாயிலுன் நுபுவ்வா (7/47) முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (12/31-32) [1] இமாம் ஹாபிழ் கலீலீ (رحمه الله)இன் அல்-இர்ஷாத் (1/313-314) [2] இமாம் இப்னு அப்தில் பர் (رحمه الله) இன் அல்-இஸ்தீஆப் (2/464) [3] இமாம் இப்னு அஸாகிர் (رحمه الله) இன் தாரீக் திமிஷ்க் ஷெய்குல் இஸ்லாம் இமாம் தகீயுத்தீன் அஸ்-ஸுப்கி தனது ஷுபாஉஸ் ஸிகாமில்►இமாம் இப்னு கதீர் (رحمه الله) தமது அல்-பிதாயா வந்-நிஹாயா (7/106) பைஹகீயின்அறிவிப்பை கூறிவிட்டு இந்த அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என கூறுகிறார். وهذا إسناد صحيح[4]. இமாம் இப்னு கதீர் (رحمه الله) மீண்டும் தமது ஜாமிஉல் மஸானீத்தில் (1/223) இதன்அறிவிப்பாளர் தொடர் நல்லதும் பலமானதும் என கூறிகிறார். إسناده جيد قوى► ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் (رحمه الله) தமது பத்ஹுல் பாரியில் (2/495)இந்த அறிவிப்பை பற்றிக்கூறும் போது இப்னு அபீ ஷைபா ஸஹீஹான அறிவிப்பாளர்தொடருடன் அறிவிக்கிறார் எனக் கூறுகிறார். وروى ابن أبي شيبة بإسناد صحيح..ஷெய்க் முஹத்தித் மஹ்மூத் சயீத் மம்தூஹ் அல்-மிஸ்ரி இதனை ஸஹீஹ் எனஉறுதிப்படுத்துகிறார்.இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஹதீதை பதிவு செய்த ஒரு ஹாபிழ் கூட இந்த ஹதீதைஷிர்க் என்றோ பித்ஆ என்றோ கூறவில்லை. குறைந்தபட்சம் ழயீஃப் என்றாவதுகூறவில்லை.
இச்செய்தியில் இடம் பெறும் மாலிகுத்தார் என்பவர் யாரென்று அறியப்படாதவர்என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இதோ அவர்களுக்கான பதில்:
1.الطبقات الكبري لابن سعد (5/12):مالك الدار مولى عمر بن الخطاب وقد انتموا إلى جبلان من حمير وروى مالك الدار عن أبي بكر الصديق وعمر رحمهما الله روى عنه أبو صالح السمان وكان معروفااஇப்னு ஸஅத் தமது தபகாத்தில் கூறுகிறார்மாலிக்குத்தார் - உமர் இப்னு கத்தாபின் விடுதலை செய்யப்பட்ட அடிமை. அபூபக்கர் உமர்(رضي الله عنه) ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். அவர் அறியப்பட்டவர்.2.قال ابن حبان في الثقات (5/384): مالك بن عياض الدار يروى عن عمر بن الخطاب روى عنه أبو صالح السمان وكان مولى لعمر بن الخطاب أصله من جبلانஇப்னு ஹிப்பான் தனது கிதாபுத் திகாத்தில் மாலிக்குத்தாரை குறிப்பிட்டுள்ளார்.3.ஹாபிழ் கலீலி தமது இர்ஷாதில்:மாலிக்குத்தார் - உமர் இப்னு கத்தாப் (رضي الله عنه)யின் விடுதலை செய்யப்பட்ட அடிமை.எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். தாபியீன்கள் அவரை புகழ்ந்துள்ளனர் எனக்கூறியுள்ளார்الْإِرْشَادُ فِي مَعْرِفَةِ عُلَمَاءِ الْحَدِيثِ لِلْخَلِيلِيِّمالك الدار مولى عمر بن الخطاب الرعاء عنه : تابعي , قديم , متفق عليه , أثنى عليه التابعون4.இமாம் யஹ்யா இப்னு மயீன் மாலிகுத்தாரை மதீனாவைச் சேர்ந்த தாபிஈன் என்றும்ஹதீத் வல்லுனர் (முஹத்தித்) என்றும் கூறியதாக ஹாபிழ் இப்னு அஸாகிரின் தாரீஹ்திமிஷ்கில் கூறப்பட்டுள்ளதுالكتب » تاريخ دمشق لابن عساكر » حرف اللام » ذِكْرُ مَنِ اسْمُهُ مَالِكٌ » مَالِكُ بْنُ عِيَاضٍ الْمَعْرُوفُ بِمَالِكِ الدَّارِ ...مالك الدار مولى عمر بن الخطاب ولاه عمر كلة عيال فلما قام عثمان ولي مالك الدار القسم فسمي مالك الدار قال وسمعت مصعب بن عبد الله يقول مالك الدار مولى عمر بن الخطاب روى عن أبي بكر الصديق وعمر بن الخطاب وقد انتسبت ولده إلى جبلان أخبرنا أبو البركات الأنماطي وأبو العز الكيلي قالا أنا أبو طاهر أحمد بن الحسن زاد الأنماطي وأبو الفضل بن خير وقالا أنا محمد بن الحسن أنا أبو الحسين الأهوازي أنا أبو حفص نا خليفة بن خياط قال مالك الدار مولى عمر بن الخطاب أخبرنا أبو البركات بن المبارك أنا أبو طاهر الباقلاني أنا يوسف بن رباح أنا أبو بكر المهندس نا أبو بشر الدولابي نا معاوية بن صالح قال سمعت يحيى بن معين يقول في تسمية تابعي أهل المدينة ومحدثيهم مالك الدار مولى عمر بن الخطاب5.இஸாபாவில் இப்னு ஹஜர் குறிப்பிடுவதின்படி (கீழே தரப்பட்டுள்ளது) மாலிக்குத்தார்அமீருல் மூமினீன் உமர் (رضي الله عنه) மற்றும் அமீருல் மூமினீன் உஸ்மான் (رضي الله عنه)அவர்களாலும் பைத்துல்மாலின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.அமீருல் மூமினீன் உமர் (رضي الله عنه) அவர்கள் போன்ற ஒரு மாபெரும் ஸஹாபிமாலிக்குத்தாரை பைத்துல்மாலை நிர்வகிக்கின்ற ஒரு அதி முக்கியமான பொறுப்பைகொடுத்ததில் இருந்தே மாலிக்குத்தாரினுடைய நம்பகத்தன்மையை உறுதி செய்யலாம்.பைத்துல்மாலை நிர்வகிப்பவர் நாட்டின் வரவு செலவுகளையெல்லாம் துல்லியமானமுறையில் பதிவு செய்பவராகவல்லவா இருந்திருக்க வேண்டும்? அவர் மிகத்துல்லியமானவர் என்பதனை எந்தவொரு ஸலபும் அவரைவிமர்சிக்காததிலிருந்து புரிந்து கொள்ளலாம். அமீருல் மூமினீன் உமர் (رضي الله عنه)அவர்கள் மாலிக்குத்தாரை ஏற்றுக்கொண்டதை அடிப்படையாக வைத்து ஏன் அவரைநாம் ஏற்றுக்கொள்ள முடியாது?இமாம் ஹாபிழ் இப்னு கதீர் தமது இரண்டு புத்தகங்களில் மாலிக்குத்தாரின் அறிவுப்பைஸஹீஹ் என கூறியுள்ளதால் அவரும் மாலிக்குத்தாரை நம்பத்தகுந்தவர் என்றேகணித்திருக்க வேண்டும்.
மாலிக்குத்தார் ஒரு ஸஹாபி என நான்கு ஹாபிழ்கள் கூறியுள்ளனர்:
இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் மாலிக்குத்தாரை ஒரு ஸஹாபி என தமதுஇஸாபாபில் கூறியுள்ளார். புகாரி தனது தாரீஹில் மாலிக்குத்தார் ஊடாகஅறிவித்ததாகவும் கூறுகிறார்قال الحافظ في الإصابة في تميز الصحابة (6/274) :مالك بن عياض مولى عمر هو الذي يقال له مالك الدار له إدراك وسمع من أبي بكر الصديق وروى عن الشيخين ومعاذ وأبي عبيدة روى عنه أبو صالح السمان وابناه عون وعبد الله ابنا مالك وأخرج البخاري في التاريخ من طريق أبي صالح ذكوان عن مالك الدار أن عمر قال في قحوط المطر يا رب لا آلو إلا ما عجزت عنه وأخرجه بن أبي خيثمة من هذا الوجه مطولا قال أصاب الناس قحط في زمن عمر فجاء رجل إلى قبر النبي صلى الله عليه و سلم فقال يا رسول الله استسق الله لأمتك فأتاه النبي صلى الله عليه و سلم في المنام فقال له ائت عمر فقل له إنكم مستسقون فعليك الكفين قال فبكى عمر وقال يا رب ما آلوا إلا ما عجزت عنه وروينا في فوائد داود بن عمرو الضبي جمع البغوي من طريق عبد الرحمن بن سعيد بن يربوع المخزومي عن مالك الدار قال دعاني عمر بن الخطاب يوما فإذا عنده صرة من ذهب فيها أربعمائة دينار فقال اذهب بهذه إلى أبي عبيدة فذكر قصته وذكر بن سعد في الطبقة الأولى من التابعين في أهل المدينة قال روى عن أبي بكر وعمر وكان معروفا وقال أبو عبيدة ولاه عمر كيلة عيال عمر فلما قدم عثمان ولاه القسم فسمي مالك الدار وقال إسماعيل القاضي عن علي بن المديني كان مالك الدار خازنا لعمرஇமாம் தஹபி தனது தஜ்ரீத் அஸ்மாஉல் ஸஹாபாவில் மாலிக்குத்தாரைஸஹாபி எனக் கூறுகிறார். (2/51, இல. 529)ஹாபிழ் இப்னு ஹஜரின் மாணவரான ஹாபிழ் தகியுத்தீன் இப்னு ஃபஹ்த் அல்-மக்கீ தனது முக்தஸர் அஸ்மாஉஸ் ஸஹாபாவில் மாலிக்குத்தாரை ஸஹாபிஎனக் கூறுகிறார்.இமாம் ஸர்க்கானி தமது ஷரஹ் மவாஹிப் அல்-லதுனிய்யாவிலும்மாலிக்குத்தாரை ஸஹாபி எனக் கூறுகிறார்.அமீருல் மூமினீன் ஃபில் ஹதீத் ஷெய்குல் இஸ்லாம் இப்னு ஹஜர் எந்தவொருஆதாரமும் இல்லாமல் மாலிக்குத்தாரை ஸஹாபி எனச் கொல்லியிருக்கவாய்ப்பில்லை. அந்த மூல ஆதாரம் என்ன என எமக்கு தெரியாததால் ஹாபிழ் இப்னுஹஜரின் கூற்றை நிராகரிக்க முடியாது. மேலும், இப்னு ஹஜர் தவிர வேறு மூன்றுஹாபிழ்களும் மாலிக்குத்தார் ஒரு ஸஹாபி என எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல்சொல்லியிருக்க வாய்ப்பில்லை. மாலிக்குத்தார் ஒரு ஸஹாபி என்றால் அவரதுநம்பகத்தன்மையை பற்றி ஆராய வேண்டிய அவசியமேயில்லை.மாலிக்குத்தார் ஸஹாபி அல்ல என வாதிட்டாலும் அது மாலிக்குத்தாரின்நம்பகத்தன்மையை பாதிக்காது, ஏனென்றால் அவ்வாறு ஸஹாபியா தாபியீனா எனசந்தேகமுள்ள பல அறிவிப்பாளர்களை நம்பத்தகுந்தவர்கள் என ஹாபிழ்கள்கணித்துள்ளனர். அதற்கு உதாரணமாக அறிவிப்பாளர் ஷரீக் இப்னு ஹன்பலைகூறலாம்.
ஷரீக் இப்னு ஹன்பலும் மாலிக்குத்தாரும்
மாலிக்குத்தாரைப் போல ஸஹாபியா தாபியீனா என கருத்து வேறுபாடுள்ள ஷரீக்இப்னு ஹன்பலை பற்றி இமாம் இப்னு ஹஜர் தஹ்தீபுத் தஹ்தீபில் பின்வருமாறுசொல்கிறார்شريك بن حنبل العبسي الكوفي قال البخاري وقال بعضهم بن شرحبيل وهو وهم روى عن النبي صلى الله عليه وسلم مرسلا وعن علي روى عنه أبو إسحاق السبيعي وعمير بن تميم الثعلبي قال بن أبي حاتم عن أبيه ليست له صحبة ومن الناس من يدخله في المسند وذكره بن حبان في الثقات رويا له حديثا في الثوم قلت وقال من قال شريك بن حنبل فقد وهم عكس ما قال البخاري وقال صاحب الميزان لا يدري من هو وذكره بن سعد في التابعين وقال كان معروفا قليل الحديث وقال بن السكن روى عنه حديث واحد قيل فيه شريك عن النبي صلى الله عليه وسلم وقيل شريك عن علي وقال العسكري لا تثبت له صحبة وأورد بن مندة حديثه وفيه التصريح بسماعه عن النبي صلى الله عليه وسلم ثم ذكر أنه روى عنه عن علي وهو الصوابஇதில் ஷரீக் இப்னு ஹன்பலைப் பற்றி கவனிக்க வேண்டிய விடயங்கள்:ஷரீக் இப்னு ஹன்பல் ஸஹாபியா தாபியீனா என கருத்து வேறுபாடுள்ளது,மாலிக்குத்தாரைப் போல.இப்னு ஸஅத், ஷரீக் இப்னு ஹன்பல் தாபியீன் என்றும், அறியப்பட்டவர் எனவும் கூறுகிறார், மாலிக்குத்தாரைப் போல. இப்னு ஹிப்பான் ஷரீக் இப்னு ஹன்பலை கிதாபுத் திகாத்தில் குறிப்பிட்டுள்ளார்,மாலிக்குத்தாரைப் போல. புகாரி எந்தவொரு விமர்சனமும் செய்யாமல் ஷரீக் இப்னு ஹன்பல் வழியாக தமதுதாரீஹில் அறிவிக்கிறார், மாலிக்குத்தார் வழியாக அறிவிப்பது போல. ஷரீக் இப்னு ஹன்பலிடமிருந்து இருவர் அறிவிக்கின்றனர்.மாலிக்குத்த்தாரிடமிருந்து நால்வர் அறிவிக்கின்றனர்.எனவே அறிவிப்பாகளைப் பற்றிய விமர்சனத்தை எடுத்துக் கொண்டால் ஷரீக் இப்னுஹன்பல் கிட்டத்தட்ட மாலிக்குத்தாரை போன்ற அல்லது அதற்கும் குறைந்த த'தீலை(நிறை) உடைய ஒரு அறிவிப்பாளரேயாகும். எனவே இவரைப் பற்றி ஹாபிழ்கள் என்னகூறுகிறார்கள் என பார்ப்போமா?ஹாபிழ் இப்னு ஹஜர் தக்ரீபுத் தஹ்தீபில் ஷரீக் இப்னு ஹன்பல் நம்பிக்கையானவர்என்று கூறுகிறார்شريك ابن حنبل العبسي الكوفي وقيل ابن شرحبيل ثقة من الثانية ولم يثبت أن له صحبة د تஹாபிழ் தஹபியும் தனது காஷிஃபில் ஷரீக் இப்னு ஹன்பலை ஏற்றுக்கொள்ளத்தக்கவர்என்று கூறுகிறார்شريك بن حنبل العبسي عن علي وعنه أبو إسحاق وعمير بن تميم وثقஎனவே இதுவே போதும் மாலிக்குத்தார் நம்பிக்கையானவர் என கூற..! மேலும் ஷரீக் இப்னு ஹன்பலை விட மாலிக்குத்தாருக்கு சில கூடுதல்சிறப்புகளுமுண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,மாலிக்குத்தாரை ஹாபிழ் கலீலி புகழ்ந்துள்ளார். மாலிக்குத்தாரை இமாம் இப்னு மயீன் முஹத்தித் எனக் கூறியுள்ளார். மாலிக்குத்தாரிடமிருந்து 4 அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர்.மாலிக்குத்தாரின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இதைவிட என்ன வேணும்?
அல்பானியின் ஆதரவாளர்களுக்கு சில தவகல்கள்:
1.இதே ஷரீக் இப்னு ஹன்பல் வழியாக சுனன் திர்மிதியில் வரும் பின்வரும் ஹதீதைபற்றி ஸலபிகள் பின்பற்றுகின்ற அல்பானீ என்ன கூறுகிறார் எனஎதிர்வு கூற முடியுமா ?سنن الترمذي/كتاب الأطعمةحدثنا محمد بن مدوية حدثنا مسدد حدثنا الجراح بن مليح والد وكيع عن أبي إسحاق عن شريك بن حنبل عن علي أنه قال نهي عن أكل الثوم إلا مطبوخاஅல்பானீ இந்த ஹதீதை "ஸஹீஹ்" எனக் கூறியுள்ளார்..!!ஷரீக் இப்னு ஹன்பலை ஏற்றுக் கொண்ட அல்பானி மாலிக்குத்தாரை ஏற்றுக்கொள்ளாததன் மர்மம் என்ன?2.இப்னு மயீன் மாலிக்குத்தாரை "முஹத்தித்" எனக் கூறியதை இப்னு அஸாகிரின்தாரீஹில் இருந்து பார்த்தோம்.இப்போது எந்தவொரு ஜர்ஹோ (குறை) த'தீலோ (நிறை) இல்லாத யஹ்யா இப்னுல் உர்யானுல் ஹரவீ எனும் அறிவிப்பாளரை பற்றி அல்பானி "ஸில்ஸிலதுல் அஹாதீதுஸ்ஸஹீஹஹ்" வில் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.الأول : قال المخلص في " الفوائد المنتقاة " في " الثاني من السادس منها " ( ق 190 / 1 ) : حدثنا يحيى ( يعني ابن صاعد ) قال : حدثنا الجراح بن مخلد قال : حدثنا يحيى بن العريان الهروي قال : حدثنا حاتم بن إسماعيل عن أسامة بن زيد عن نافع عنه . وبهذا السند رواه الدارقطني ( 36 ) وعنه ابن الجوزي , ورواه الخطيب في " الموضح " ( 1 / 111 ) عن ابن صاعد , وفي " التاريخ " ( 14 / 161 ) من طريقين آخرين عن الجراح بن مخلد به . وهذا سند حسن عندي , فإن رجاله كلهم ثقات معروفون غير الهروي هذا فقد ترجمه الخطيب ولم يذكر فيه جرحاً ولا تعديلاً , غير أنه وصفه بأنه كان محدثاً .எந்தவொரு ஜர்ஹோ (குறை) த'தீலோ (நிறை) இல்லாத யஹ்யா இப்னுல் உர்யானுல் ஹரவீ எனும் அறிவிப்பாளரை ஹாபிழ் கதீப் அல்-பக்தாதி முஹத்தித் எனக்கூறினார் என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து அல்பானி தாரகுத்னியில் அவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீதை "ஹஸன்" எனக் கூறுகிறார். எனவே இப்னு மயீன் மாலிக்குத்தாரை "முஹத்தித்" எனக் கூறியிருக்க அவரை மட்டும் அல்பானீ ஏற்றுக் கொள்ளாததன் மர்மம் என்ன? மாலிக்குத்தார் பற்றிய தகவல் அல்பானிக்கு கிடைக்காததால் அவர் மாலிக்குத்தாரை அறியப்படாதவர் எனக் கூறியிருக்கமுடியும். அல்லது வேண்டுமென்றே மறைத்திருக்கலாம், அல்லாஹு அ'லம்! எது எப்படியிருந்தாலும் எமக்கு அல்பானியின் கருத்து முக்கியமல்ல, அவர் ஒரு ஹாபிழுமல்ல! எமக்கு ஷெய்குல் இஸ்லாம் இப்னு ஹஜர், ஹாபிழ் தஹபி மற்றும் ஹாபிழ் இப்னு கதீர் போன்ற ஹாபிழ்களின் முடிவுகளே முக்கியம். அவர்களின் கூற்றுப்படி மாலிக்குத்தாரின் ஹதீத் ஸஹீஹாகும்.
கப்ருக்கு சென்று உதவி தேடிய மனிதர் பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ எனும் ஸஹாபியாவார்.
ஹாபிழ் இப்னு ஹஜர் தனது ஃபத்ஹுல் பாரியில் (2/495) கப்ருக்கு சென்று உதவி கோரிய மனிதர் பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ எனும் ஸஹாபியென ஸய்ஃப் இப்னு உமர் தமீமி தனது ஃபுதூஹ் எனும் நூலில் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.وروى ابن أبي شيبة بإسناد صحيح من رواية أبي صالح السمان عن مالك الداري - وكان خازن عمر - قال " أصاب الناس قحط في زمن عمر فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فقال: يا رسول الله استسق لأمتك فإنهم قد هلكوا، فأتى الرجل في المنام فقيل له: ائت عمر " الحديث.وقد روى سيف في الفتوح أن الذي رأى المنام المذكور هو بلال بن الحارث المزني أحد الصحابة، وظهر بهذا كله مناسبة الترجمة لأصل هذه القصة أيضا والله الموفقசிலர் ஸய்ஃப் இப்னு உமர் பலவீனமானவர். எனவே அவரின் கூற்றை ஏற்க முடியாது எனக் கூறுகின்றனர்.பதில்:1.வஸீலாவுக்கான ஆதாரம் கப்ருக்கு சென்று உதவி தேடிய மனிதரின் செயலிலுண்டு என்று சொல்வதை விட அச்செயலை பற்றி அறிந்தும் அதனை கண்டிக்காமல் இருந்த அமீருல் மூமினீன் உமர் (رضي الله عنه) அவர்களின் செய்கையிலேயே உள்ளது. ஒருவர் ஷிர்க்கை செய்தாரென்றால் உமர் (رضي الله عنه) அதனை கண்டித்திருப்பார்களல்லவா ? அவரை மீண்டும் கலிமாவை மொழிந்து இஸ்லாத்துக்கு வருமாறு பணித்திருப்பார்களல்லவா?உமர் (رضي الله عنه) அவர்கள், கப்ருக்கு சென்று உதவி தேடிய மனிதரின் செயலை ஏற்றுக்கொண்டார்கள் என்பதே எமது வஸீலாவுக்கான ஆதாரம்.2.ஸய்ஃப் இப்னு உமரைப்பற்றி இப்னு ஹஜர் தக்ரீபுத் தஹ்தீபில் (இல.2724) கூறுகையில், அவர் ஹதீதுகளை அறிவிப்பதில் பலவீனமானவர் என்றும், வரலாற்று நிகழ்வுகளை அறிவிப்பதில் ஒரு தூண் என்றும் (மிக மிக உறுதியானவர்) என்றும் குறிப்பிட்டுள்ளார். (ضعيف الحديث عمدة في التاريخ)தபரியின் தாரீஹ், இப்னு ஹஜரின் இஸாபா, இப்னு கதீரின் பிதாயா, ஸஹாவீயின் ஃபத்ஹுல் முகீத்,இப்னு அப்தில் பர்ரின் இஸ்தீஆப், தஹபியின் தாரீஹுல் இஸ்லாம் போன்றவற்றில் ஸய்ஃப் இப்னு உமரின் வழியாக அறிவிக்கப்பட்டுள்ள அநேக வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாலிகுத்தாரின் சம்பவமானது ஒரு வரலாற்று நிகழ்வேயன்றி ஹதீதல்ல. எனவே கப்ருக்கு சென்ற மனிதர் பிலால் இப்னு ஹாரித் என்ற ஸய்ஃபின் கூற்று ஏற்றுக்கொள்ள வேண்டியதே.கப்ருக்கு சென்று உதவி கோரிய மனிதர் பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ (رضي الله عنه) எனும் ஸஹாபியெனும் ஸய்ஃப் இப்னு உமரின் கூற்றை பின்வரும் இமாம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.ஹாபிழ் இப்னு ஹஜர் - ஃபத்ஹுல் பாரிஹாபிழ் இப்னு கதீர் - பிதாயா வந் நிஹாயாஇப்னு அதீர் - அல்-காமில் ஃபில் தாரீஹ்தபரி - தாரீஹ்எனவே ஒரு ஸஹாபியான பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ (رضي الله عنه) அவர்களின் செய்கையும் கூட வஸீலாவுக்கான ஆதாரமே..!