السلام عليكم
இமாம்கள் பேரவை சார்பில் சேலத்தில் நடக்கவிருக்கும் ஆலிம்கள் பேச்சுப் போட்டியை பற்றி சமீபத்தில் வாட்சப்பில் தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா செயளர் மௌலவி ஸராஜுத்தீன் அவர்கள் எழுதியிருந்தார்., “மாநில உலமா பேரவையிலிருந்து பிரிந்து சென்ற “இமாம்கள் பேரவையை”, மீண்டும் மாநில உலமா சபையில் இணைக்க வேண்டும்.”
மாநில உலமா சபையில் சுன்னத் வல் ஜமாத் உலமாக்கள் மட்டும் இல்லை. அதில் ஜமாத்தே இஸ்லாம் மற்றும் தப்புலீக் ஜமாத் போன்ற பல அமைப்புகளைச் சார்ந்த பலரும் அதில் அங்கம் வகிப்பதால், 1983 ம் வருடம் திருச்சி மலைக்கோட்டை பெரிய பள்ளியில் தமிழ் நாட்டின் முக்கிய உலமாக்கள் கூடி சுன்னத் வல் ஜமாத் கொள்கையில் பிடிப்பாக இருக்கின்ற உலமாக்களைக் கொண்டு மட்டும் இயங்கக்கூடிய தமிழ் மாநில மஜ்லிசு உலமாயே அஹ்லுச்சுன்னதி வல் ஜமாத் என்ற பெயரில் காயல்பட்டினம் மௌலவி ஸாஹிப் தம்பி மஹ்லரி அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது.
அவர்களுக்குப் பிறகு காயல்பட்டினம் மஹ்லராவில் 35 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய மௌலானா மௌலவி அஷ்ஷெகு ஸைஃபுத்தீன் ரஹ்மானீ பாக்கவீ ஹஜ்ரத் அவர்களின் சீரிய தலைமையில் இப்போதும் இயங்கிவருகிறது.
செயலாளராக மௌலானா மௌலவி நபிவழிபேரர் அஷ்ஷெகு வஜ்ஹுன்னகீ லத்தீஃபீ தஞ்சாவூர் அவர்கள் செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
சுன்னத் வல்ஜமாத் கொள்கையில் மட்டும் ஊரித்திலைக்க விரும்பும் இளம்-முதிர் உலமாக்கள் மேற்கூறப்பட்ட ‘’மஜ்லிசு உலமாயி அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்’’ என்ற உலமா சபையில் சேருங்கள்.
கலப்பட சபை வேண்டாம். கலப்பற்ற சபையே வேண்டும். இவ்வுலகில் கலப்பற்ற கூட்டத்தில் இருந்தால், இன்ஷா அல்லாஹ் மறுஉலகிலும் சுவனத்தில் கலப்பற்ற ஜமாத்தில் இருக்கலாம்.
கீழுள்ள குர்ஆன் ஆயத்துக்களை உலமாக்கள் சிந்திக்கவும்.
02:042
06:068 09:119
11:113
தொடர்புக்கு:
மௌலவி அப்துற்றஸ்ஸாக் கௌஸீ
பொருளாளர் : மஜ்லிசு உலமாயி அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத் தமிழ் மாநிலம்.
CELL: 9940586090