Tuesday, December 6, 2016

தவ்ஹீத் ஜமாஅத்தே.....!! இதை படி 👇👇

தவ்ஹீத் ஜமாஅத்தே.....!!

இதை படி 👇👇

நமது முன்னோடிகள் யார்?
நல்லோர்களான இமாம்களா?
நவீன ஏகத்துவ ஏஜெண்ட்களா?

இமாம்களின் வழி நடப்போம்!
இறைவனின் பொருத்தத்தை அடைவோம்!

இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி,
இஸ்லாமில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்னிலையில் நாம் வாழ்கிறோம்.

குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது.
இன்றைய நவீன அறிஞர்களையா?
அல்லது அல்லாஹ்வுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களையா?

இதோ உங்கள் சிந்தனைக்கு........

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது.

மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை  நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும்.

மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. அந்த நான்கு வழிமுறைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே..

அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும்.

1. ஹனபி மத்ஹப் =
அபு ஹனிபா நுஃமான் இப்னு ஸாபித் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி  80  - 150.

2. மாலிகி மத்ஹப் =
மாலிக் இப்ன் அத்ப்த்ிய்ரஹ்).
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 93 - 179.

3. ஷாபி மத்ஹப் =
அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ்-ஷாபி .
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 150 - 204.

4. ஹன்பலி மத்ஹப் =
அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு ஹன்பல் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  164 - 241.

மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின்  காலங்களும் கிட்டத்தட்ட ஒரே காலம்தான் .

மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால்  நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் ஏற்ப்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்!

ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது.

புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை.  மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று.
நான்கு இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான்.
வெறும் முப்பது வருடங்களுக்குள்.)

ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும்!

ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய ஹதீஸ்  நூல்களைத் தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!!

அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்!

1. ஸஹீஹ் அல் புகாரி =
அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி .
வாழ்ந்த காலம்:  194 - 256.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  7275.

2.  ஸஹீஹ் முஸ்லிம் =
அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் அன் நய்சாபூரி.
வாழ்ந்த காலம்:  204-261
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  2200.

3. அபு தாவூத் =
அபு தாவூத் சுலைமான் இப்னு அல் அசாத் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  202 - 275.
பின்பற்றிய மத்ஹப் =  ஹன்பலி
தொகுத்த ஹதீத்கள் = 4800.

4.  திர்மிதீ=
அபு ஈஸா இப்னு ஈஸா திர்மிதீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209-279.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி
தொகுத்த ஹதீத்கள் = 3956.

5.  நஸாயீ =
அஹ்மத் இப்னு சுஹைப் இப்னுஅலி அந்-நஸாயீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  215 - 300.
பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி.
தொகுத்த ஹதீத்கள் = 5270

6. இப்னு மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு மாஜா (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209 - 273.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் = 4000.


மத்ஹப்கள் அனைத்தும் குப்பை, இமாம்களைப் பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது ,
குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு பகிரங்க அறைகூவல்.!

ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள்.
ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும்!

பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள்.
அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,
ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.
ஆகையால் அவர்கள் தொகுத்த  அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ள  வேண்டும்!!
செய்வார்களா ???

எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?
முஸ்லிமில் இருக்கிறதா?
(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நவீன ஏகத்துவவாதிகளே!

மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும்
ஏகத்துவத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கணவான்களே!

இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள்.

மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள்
தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து,
இந்த சமுதாயத்திற்கு ஹதீஸ்களை வழங்கிய மத்ஹப்களை பின்பற்றி வாழ்ந்த மரியாதைக்குரிய ஹதீஸ்களை வல்லுநர்களையும் நிராகரிப்பில் தள்ளுகிறீர்களா?

சகோதரர்களே!
நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்த நம் இமாம்களின் விளக்கங்களை ஏற்று அவ்வழியில் ஒற்றுமையான சமூகமாக, பலம் மிக்க உம்மத்தாக பயணிப்போமா?
அல்லது பிரிவினையை வளர்க்கும் நவீன ஏகத்துவ ஏஜண்ட்களைப் பின்பற்றி சிதறுண்டு கிடப்போமா?

சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்!

Rcvd........