Wednesday, August 24, 2016

அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னதாக அவருடைய இறை நம்பிக்கை என்னவாக இருந்தது ?

*அஃலா ஹஸ்ரத்திடம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கேள்வி :-*

பதிவு நாள்  : 24.08.2016
பதிவு எண் : 6

*கேள்வி*
அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னதாக அவருடைய இறை நம்பிக்கை என்னவாக இருந்தது  ?

*அஃலா ஹஜ்ரத்தின் பதில்*

அவர் ஒரு சிலை க்கும் ஸஜிதா செய்ததேயில்லை .
அவருக்கு நான்கு வயது இருக்கும்போது , அவருடைய தகப்பனார் அவரை கஃபாவில் ஒரு விக்ரகத்தின் முன்னால் கொண்டுசென்று நிறுத்திவிட்டு அவரிடம் இப்படி சொன்னார்

"இது தான் உன்னுடைய வலிமை வாய்ந்த இறைவன், ஆகவே நீ அவனுக்கு
ஸஜ்தா செய்"
என்று கட்டளையிட்டார்

இதை கேட்ட அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு, அந்த விக்ரகத்தை பார்த்து,
_நான் பசியாக இருக்கிறேன், எனக்கு உணவளி_;
_நான் ஆடையின்றி இருக்கிறேன், எனக்கு ஆடையணிவித்து விடு_ ;
_நான் ஒரு கல்லை எடுத்து உன்னை எறிகிறேன், நீ கடவுளாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்_ !!!

அந்த விக்ரகத்திடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

அதனால் அவர் ஒரு கல்லை எடுத்து அந்த விக்ரகத்தை எறிந்தார்.
புனிதமாத சக்தியினால் கல்லின் வேகத்தினால் அந்த விக்ரகம் கீழே விழுந்தது.

இதை கண்ட தகப்பனாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு வை முகத்தில் பளீரென்று அரைந்தார். பின்னர் வீட்டுக்கு அழைத்து சென்று தாயாரிடம் புகார் செய்தார். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹுவின் தாயார் பதில் செல்லியதாவது _"அவரை அவர் வழியில் விட்டுவிடுங்கள் ,  ஏனென்றால், அவர் பிறந்தபோது, தோற்றமளிக்காத யாரோ ஒருவர் என்னிடம் வந்து இவ்வாறு சொல்வதை நான் கேட்டேன்_,  :- ஓ இறைவனின் அடிமையே !  ஸித்தீக் ( உண்மையாளர்) என்று வானுலகில் பெயர் சூட்டப்பட்ட ஒருவர் உங்களுக்கு பிறந்திருப்பதில் உனக்கு வாழ்த்துக்கள தெரிவிக்கிறேன், அவர் முஹம்மது ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிக நெருங்கிய தோழரும் ஆகுவார்.

மேலும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்,இதெல்லாம் எல்லாம் என்னவென்று அந்த நேரத்தில் எனக்கு புரியவில்லை ! முஹம்மது என்பவர் யாரென்று அப்போது எனக்கு தெரியாது !

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு தனிப்பட்ட முறையில் இந்த சம்பவத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடம் விவரித்துக் முடிக்கும்போது, ஒரு மலக்கு அங்கே தோன்றி அபூபக்கர் உண்மையை சொன்னார் என்று அந்த மலக்கு உறுதிபடுத்தினார்.

இந்த ஹதீஸ்
  معالي العرش إلى عوالي الفرش
என்ற நாலிலும், ஸஹீஹுல் புகாரியின் விளக்கவுரையில் இமாம் கஸ்தலானியும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

*ஆதாரம்*  :  அல் மல்பூஸ் அல் ஷரீப், பாகம் 1

*Join ஈமானை பாதுகாப்போம்  WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

��