Wednesday, August 24, 2016

சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்திசயத்தை மறைப்பது குற்றமாகும்

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்திசயத்தை மறைப்பது  குற்றமாகும்

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

நரகத்தின் மலக்குகள் முதலில் சிலை வனக்கம் புரிபவர்களை விடுத்து வழிதவறிய ஆலிம்களைப் பிடித்துச் செல்வார்கள்.

அதற்கு இந்த ஆலிம்கேட்பார்கள்" சிலைவனக்கம் புரிபவர்களைவிடுத்து எங்களை ஏன் முதலில் கொண்டு செல்கிறீர்கள்?"

என்று கேட்பார்கள்.

அப்பொழுது மலக்குமார்கள் கூறுவார்கள்"

என்ன! அறிந்தவரும்,அறியாதவரும் ஒன்றாவார்களா?

(Shuab al-Iman: Al-Bayhaqi:1900)-

சகோதரர் களே ! ஆலிம்களின் மரியாதை என்பது அவர்கள்
நபி அவர்களின் வாரிசு
என்பதால் தான்.

மேலும்  அதனால் தான் அவர்களுக்கு நேர்வழியும் கிடைக்கிறது. அவர்கள் வழிகேட்டில் இருந்தால் 

அவர்கள்
நபியின் வாரிசுகளா?

இல்லை அவர்கள்
சைத்தானின் வாரிசுகளே !

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

(ஆலாஹஜ்ரத் இமாம் அஹ்மத் ரஜா ஃபஜிலே  பரேல்வி அவர்களின்

− தம்ஹீதே ஈமான்
என்ற நூலில் இருந்து )

அந்த நூலை கான்பதற்கு கிழே உள்ள Link ஜ Clik செய்யவும்

https://madinasharif.files.wordpress.com/2010/07/tamheed-ul-iman-by-ala-hazrat.doc

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

மேலும் இவ் விஷயத்தை குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது என்று பார்போம் ,

நிச்சயமாக ( யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் உள்ள உலமாக்கள் ) அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்திருந்தும் உண்மையை
மறைக்கின்றனர்.

                             அல்குர்ஆன்: 2:146

குறிப்பு : சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்திசயத்தை மறைப்பது  குற்றமும்      பாவமும்  ஆகும் .

இன்னும் யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் உள்ள உலமாக்களின் நடைமுறை ஆகும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாகும் .

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.    
                               அல்குர்ஆன்:(2:159)

சன்மார்க்க சட்ட பிரகாரம் , ஷரிஅத் சம்பந்தமான ஞானங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி கூறுவது உலமாக்கள் மீது ஃபர்லான கடமையாகும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாகும்.

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
                            அல்குர்ஆன் (2: 160)

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
( சைத்தானும் ஆலிம் தான் )
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●