♣ சுவனத்தில் பரிந்துரை செய்பவர்களில் முதலாமவன் நான்.
முஸ்லிம் 93
♣ நபிமார்களில் எந்த நபியும் நான் உண்மை படுத்தப்பட்ட அளவிற்கு உண்மை படுத்தப்படவில்லை.
முஸ்லிம் 93
♣ ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் உடலுக்கும், ருஹூக்கும் இடையில் இருந்தபோதே நான் நபிதான்.
திர்மிதி, முஸ்னத் அஹ்மத் 4-66, 5-379
♣ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரஸூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்.
ஸஹிஹுல் புகாரி 335, முஸ்லிம் 521, மிஷ்காத் 5747
♣ நானே உங்கள் யாவரிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவனாகவும், மிக வாய்மைக்குரியவனாகவும், மிக நல்லவனாகவும் இருக்கின்றேன்.
மிஷ்காத் 226
♣ நானே முன்னோர், பின்னோர் யாவரிலும் அல்லாஹ்விடம் மிக சங்கைக்குரியவனாக இருக்கின்றேன்.
திர்மிதி 3615,3616, தாரமி 47, முஸ்னத் அஹ்மத் 2-243, மிஷ்காத் 5762, 5920
♣ நான் சிறந்தோர் வழியாகவே வந்துள்ளேன்.
தப்ரானி (கபீர்) 13474, ஹாகிம் 705, தலாயில் நுபுவா 3-294
♣ எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் முஹம்மத் (புகழப்படுபவன்), நான் அஹ்மத் (அல்லாஹ்வினால் அதிகம் புகழப்பட்டவன்), நான் மாஹி (குப்ரை அழிப்பவன்), நான் ஹாஷிர் (எனக்கு பின்னால் என் வழிதொடரும் சமுதாயம் கொண்டவன்) நான் ஆகிப் (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்)
ஸஹிஹுல் புகாரி, முஸ்லிம் 2849, திர்மிதி, அஹ்மத்
♣ நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்குமிடையில் இருக்கும்போது நான் நபியாக இருந்தேன்.
மிஷ்காத் 513
♣ நானோ ஹபீபுல்லாஹ்வாக (அல்லாஹ்வின் அன்பராக) இருக்கிறேன்.
திர்மிதி 3615,3616, இப்னு மாஜா 4308, மிஷ்காத் 5762,63
♣கியாமத் நாளையில் முதன் முதலில் பரிந்துரை செய்பவனாகவும், முதன் முதலில் பரிந்துரை ஒப்புக்கொள்ளப்பட கூடியவனாகவும் இருக்கிறேன்.
திர்மிதி 3615,3616, இப்னு மாஜா 4308, மிஷ்காத் 5762,63