மௌலவி ரஷீத் அஹமத் கங்கோஹி கூறுகிறார் , " முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பின்பற்றுவோரை வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படும் . அவர்களது கொள்கைகள் மிகவும் சிறந்தது "
[ நூல் - பதாவா ரஷீதியா ,வால்யூம் 1, பக்கம் 111 ]
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கும் விதமாக மௌலவி மன்சூர் நுஃமானி கூறுகிறார் , " மேலும் நாங்கள் இங்கே தெளிவாக குறிப்பிடுகின்றோம் நாங்கள் தீவிர வஹ்ஹாபிகள் "
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]
மௌலானா முஹம்மத் ஜக்கரியா காந்தலவி கூறுகிறார் , " மௌலவி சாஹிப் , நானோ உங்களை விட பெரிய வஹ்ஹாபி "
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]
அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் , " சகோதரரே, இங்கு வஹ்ஹாபிகள் உள்ளோம். இங்கு பாத்திஹா,நியாஜ் என்று எந்த பொருளையும் கொண்டு வராதீர்கள் "
[ நூல் -அஷ்ரபுஸ் சவானெஹ் ,புத்தகம் 1, பக்கம் 45]
தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் வாயிலிருந்தே அவர்கள் யார் என்று விளக்கியபின்னரும், உங்கள் சிந்தையில் தெளிவாகவில்லையாயின் , அல்லாஹ் காப்பாற்றட்டும் !!!
ஒரு முஸ்லிமான அடியானின் அகீதா(கொள்கைகள்) சீர்கெட்டால் அவனது ஈமான் முறையற்றதாகிறது, மேலும் ஈமான் சரியாக இல்லை என்றால், அவரது அமல்கள்(இஸ்லாமிய செயல்முறைகள்) பயனற்றதாகிறது.