~*மௌலிது ஓதுவது பற்றி மகான்களின் மணி மொழிகள்
தொகுப்பு*~
கலீபதுல் காதிரி மௌலவி பாஸில் ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்
01. என்னை நேசித்தவர் மறுமையில் என்னுடன் இருப்பார்.
(நபி மணிமொழி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
02. அண்ணலாரின் மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்பவர் சொர்க்கத்தில் எனது "தோழராக" இருப்பார்.
(அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு)
03. அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்தியவர்
இஸ்லாத்தை உயிர்ப்பித்தவராவார்.
(அமீறுல் மூஃமினீன் உமர் ரலியல்லாஹு அன்ஹு)
04. மஹ்மூத் நபியின் மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்தவர் "பதுறு,
உஹது" போர்முனைகளில் கலந்து கொண்டவரைப் போலாவார்.
(உதுமான் ரலியல்லாஹு அன்ஹு)
05. நாயகத் திருமேனியின் பிறந்த தினத்தை கண்ணியப்படுத்தியவர், மவ்லிது ஓதக்கூடியவர் ஈமானுடன்
மௌத்தாவார் சுவனத்தில் பிரவேசிப்பார்.
(அலி ரலியல்லாஹு அன்ஹு)
06. எனக்கு உஹது மலைபோன்ற தங்கமலை இருக்குமாயின் அனைத்தையும் பெருமானாரின் மௌலிதை
ஓதுவதற்காகவே செலவிட ஆசைப்படுகின்றேன்.
(ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
07. நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஆட்களைச் சேர்த்து, உணவு சமைத்து நல்ல முறையில் அன்புடன் அமல் செய்பவரை அல்லாஹுத்தஆலா சித்தீகீன்கள், ஷுஹதாக்கள் ஆகியோரின் திருக்கூட்டத்தில் எழுப்புவான். இவர்கள் சுவனத்திலும் அவர்களுடன் இருப்பார்.
(இமாம் ஷாபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
08. ஒரு குறிப்பிட்ட இடத்தை மவ்லிது ஓதுவதற்கென எண்ணி தேர்வு செய்துவைக்கும் நபர் சுவனத்தில் ஒரு நந்தவனத்தை தெரிவு செய்தவர் போலாவார். காரணம் அவர் அஹ்மது நபிமீதுள்ள அளவிலாத அன்பின்
காரணத்தினால்தானே ஓரிடத்தைத் தேர்வு செய்தார்.
(இமாம் ஸிர்ரியுல் ஸிக்தி ரலியல்லாஹு அன்ஹு)
மவ்லிது ஓதப்படும் இடத்தினை மலாயிக்கத்துக்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். அல்லாஹுத்தஆலா தனது திருப்பொருத்தம், ரஹ்மத் ஆகியவைகளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்து கொள்கிறான்.
எந்த முஸ்லிமின் இல்லத்தில் மெளலிது ஓதப்படுகின்றதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல்,
மற்றும் அனைத்து வகை சோதனைகள், கஷ்டங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்கின்றான். அவ்வில்லத்தார்கள் மரணமடைந்து கப்றின் கேள்விகள் அவர்களுக்கு இலேசாக்கப்படுகின்றன.
(இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
மௌலிது ஓதுவதற்காக உணவு தயாரித்து, நண்பர்களை ஒன்று சேர்த்து, விளக்கேற்றி வைத்து,
புத்தாடை உடுத்தி, நறுமணம் பூசி மௌலிதை கண்ணியப்படுத்துபவர் மறுமையில் எழுப்பப்படும் முதல் பிரிவினரான நபிமார்களுடன் அவர்களை வல்ல நாயன் சேர்த்தருள்வான். உன்னதமான உயர் பதவிகளையும் அவர்கட்கு வழங்குவான்.
(மஃறூபுல் கர்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
யாராவது ஒருவர் ஏதும் தின்பண்டங்களை வைத்து மௌலிது ஓதுகிறாரோ,
அவருக்கு அப்பொருளிலிருந்து பரக்கத்தை நல்குவான். அப்பண்டங்களை உண்பவருக்கு இறைவன் பிழை பொறுத்துக் கொள்கின்றான்.
நபிகள் கோமானின் வாழ்க்கை சரிதையைக் கொண்ட மௌலிது மஜ்லிசில் சிறிதளவு நீர் வைத்து ஓதி ஊதி குடிப்பவருக்கு ஆயிரம் வகை நிஃமத்துக்களும்,
பிரகாசமும், நூரும் அவரது உள்ளத்தில் சேருகின்றன. ஆயிரம் வகை நோய் அவரை விட்டும் நீங்குகின்றன.
தங்கத்தாலோ, வெள்ளியாலோ அல்லது வேறு உலோகங்களினால் செய்யப்பட்ட ஒரு நாணயத்தின் மீது மவ்லிதை ஓதி ஊதி அந்த நாணயத்தை வேறு நாணயங்களுடன் சேர்த்து வைத்தால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரக்கத் அருள்மாரி பொழியும். வறுமை அணுகாது.
ஆதாரம் : அந்நிஃமத்துல் குப்ரா, பக்கம் : 07 – 11
இமாம் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
நன்றி : வஸீலா 15.12.1987
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
Forward
All
Sunnth Jamath Group's
💯