Thursday, September 15, 2016

பள்ளிவாசல் திருடர்கள் ஜாக்கிரதை! தப்லீக் ஜமாஅத் (தப்பு லீக் கூட்டம்)

👆?

பள்ளிவாசல் திருடர்கள் ஜாக்கிரதை! தப்லீக் ஜமாஅத்   (தப்பு லீக் கூட்டம்)
≈ ≈ ≈≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈ ≈

பள்ளிவாசல் திருடர்கள் ஜாக்கிரதை! தப்லீக் ஜமாஅத்

உலகில் பல்வேறு விதமான திருடர்கள் உள்ளார்கள். பணம் திருடுபவன், பொருள் திருடுபவன் என்று. ஆனால் இந்த தப்லீக் ஜமாஅத் சற்று வித்தியாசமானவர்கள். இவர்கள் திருடுவது என்ன தெரியுமா? சுன்னத் வல் ஜமாஅத் பெரியோர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை, ஸாவியாக்கள், தக்கியாக்கள், மதரஸாக்களை.
.
இவர்களின் பணத்தை கொண்டு ஒரு பள்ளிவாசல் கூட கட்ட மாட்டார்கள். ஆனால் இஸ்லாமிய வரலாற்றிலே இவர்கள்தான் மாபெரும் தியாக செம்மல்களாக காட்டி கொள்வார்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை தீனுக்காக தியாகம் செய்ய வேண்டும், தீனுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று அலறுவர். ஆனால் இவர்களின் தியாகம் சற்று வித்தியாசமானது. பள்ளிவாசல் திருடுவதுதான் இவர்களின் வேடிக்கையான தியாகம்.
.
தினமும் பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்ததும், அனைத்து முஸ்லிம்களிடம் தீன் வர பெரியோர்கள் ஒரு வழிமுறையை சொல்லி தந்துள்ளனர் என்று அடிக்கடி அறிவிப்பு செய்வதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். அவர்களின் பெரியோர் தீன் வர மட்டுமல்ல, முஸ்லிம்களின் ஈமானை திருடவும், பள்ளிவாசல்களை திருடவும் அழகான ஒரு வழிமுறையை சொல்லி கொடுத்துள்ளனர்.
.
அது இதுதான்:
.
♦ சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் வாழும் ஊரில் அம்மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அழகாக ஒரு பள்ளிவாசல் கட்டுவர்.
.
♦ அங்கு தொழுகை மட்டுமல்ல, திக்ர் மஜ்லிஸ், ராத்திப் மஜ்லிஸ், சலவாத் மஜ்லிஸ், மௌலித் மஜ்லிஸ் என அனைத்தும் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும்.
.
♦ அழகான மின் விளக்குகளாலும், அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதான ஸலவாத்துகளாலும் பள்ளிவாசல் ஒளி வெளிச்சத்தில் பிரகாசித்து கொண்டு இருக்கும்.
.
♦ இப்போதுதான், இந்த பள்ளிவாசல் திருடர்களின் கண்களுக்கு அது தெரிப்படும். எப்படி அந்த பள்ளிவாசலை சூறையாடுவது என்று திட்டம் தீட்டுவர் இந்த கயவர்கள்.
.
♦ இவர்களின் முதல் பணி, ஐந்து நேரமும் தவறாமல் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளுவர். தொழுகை முடிந்ததும் மின்விளக்குகளை அணைப்பது, மின் விசிறிகளை அணைப்பது என பள்ளிவாசளுக்காக தாம் கஷ்டப்படுவதாக காட்டி கொள்ளுவர் இந்த முனாபிக்குகள்.
.
♦ அங்கு நடைப்பெரும் திக்ர் மஜ்லிஸ், மௌலித் மஜ்ளிஸ்களிலும் உட்கார்ந்து கொள்ளுவர் இந்த வெட்கம் கெட்ட பிறவிகள். தாமும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்று காட்டி கொள்வதற்காக.
.
♦ அங்கு தொழுகைக்கு வரும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய ஆனால், அகீதா அறிவு இல்லாத மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு கொடுப்பர்.
.
♦ தீனுக்காக உழைக்க வேண்டும், தீனுக்காக உழைக்க வேண்டும் என்று ஆக்ரோசமாக பேசி இளைஞர்களின் உள்ளங்களை மாற்றி விடுவர்.
.
♦ அடுத்தது, அவர்களின் மிக பெரிய வலையை வீசுவர். அதுதான், பள்ளியில் தஃலீம் வாசிக்க இடம் கேட்பர். அதில் "நல்ல விசயம் தான் உள்ளது. தொழுகையின் சிறப்புகள், நோன்பின் சிறப்புகள், திக்ரின் சிறப்புகள் என எல்லாம் நல்ல விசயங்களைதான் சிறுவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோம்" என்றுதான் ஆரம்பிக்கும் இந்த முனாபிக்குகளின் வலைவீச்சு.
.
இந்த முனாபிக்குகளின் வெளிதோற்றத்தை கண்டு ஏமாறும், ஒழுங்காக அகீதா தெரியாத பள்ளி நிர்வாகம் அதற்கு இடம் கொடுக்கும். ஒரு வேளை, கொஞ்சம் விசயம் தெரிந்த பள்ளி நிர்வாகமாக இருந்தால் இடம் கொடுக்க மறுப்பர். அப்படி மறுத்தால், இவர்கள் மூளை சலவை செய்து கையில் போட்டு வைத்திருக்கும் ஊர் இளைஞர்களை பயன்படுத்துவர். பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக அந்த இளைஞர்கள் குரல் கொடுப்பர். சண்டை சச்சரவுகளை மேற்கொள்ளுவர். கடைசியில் ஊர்காரர்களை பகைத்து கொள்ள முடியாது என நினைத்து பள்ளி நிர்வாகமும் இடம் கொடுக்கும்.
.
சில நேரம் ஒருபடி மேலே போய், பாதாள உலக கோஷ்டியினரை வைத்து பள்ளி நிர்வாகத்தை மிரட்டி இடம் கேட்பர். இப்படி கொழும்பில் நடைபெற்று இருக்கிறது. கொழும்பில் உள்ள ரிபாய் தக்கியா ஒன்றில் தஃலீம் வாசிக்க இடம் கொடுக்காததால் அந்த ஏரியாவில் உள்ள ரௌடி ஒருவனை வைத்து நிர்வாக சபையை பயமுறுத்தி கடைசியில் இடம் வாங்கினர். இவர்கள் தான் தீன்தாரிகள்.
.
♦ தஃலீமுடன் ஆரம்பித்த பள்ளி ஊடுருவல் அடுத்து கஸ்து போவது, பயான் செய்வது என நீடிக்கும்.
.
♦ கொஞ்சம் கொஞ்சமாக தீனுக்காக உழைக்கிறோம், தொழுகைக்காக கூப்பிடுகிறோம் என்று கூறி அவ்வூர் மக்களை மூளை சலவை செய்து கூட்டம் சேர்ப்பர். கூட்டமும் சேர்ந்து விடும்.
.
♦ இப்போது அவர்களின் கடைசி பெரிய திட்டம் அமுல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம், பள்ளி நிர்வாக சபை தெரிவுக்காக வாக்கெடுப்பு நடைப்பெறும். அதிகம் கூட்டம் சேர்த்துவிட்ட இவர்களின் ஆட்களை பள்ளி நிர்வாக சபைக்கு போட்டியிட வைத்து அவர்களை தேர்ந்தெடுப்பர்.
.
♦ பள்ளி நிர்வாக சபை அவர்களின் கைக்கு போய் விடும்.
.
♦ இப்போது அவர்களின் அசல் சுயரூபம் வெளிப்படும். அவர்களின் முதல் நடவடிக்கையாக, பள்ளிவாசலில் பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வதை நிறுத்துவர். கொஞ்ச நாட்களில் திக்ர் மஜ்லிஸ், ராத்திப், ஹலரா போன்றவை நடைபெற்று வந்தால் அவற்றுக்கு இடம் தர முடியாது என்று கூறி அதனையும் நிறுத்துவர். கடைசியில் வருடா வருடம் நடைபெற்று வரும் மௌலித் மஜ்லிஸ்களுக்கு இடம் தர முடியாது என கூறி அதனையும் நிறுத்துவர்.
.
இதுவும் இலங்கையில் பல இடங்களில் நடைபெற்று இருக்கிறது. கொழுப்பு வெள்ளவத்தை என்னும் இடத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒரு ஷாதுலியா தரீக்காவின் ஷாவியா. சூழ உள்ள மக்களை கையில் போட்டு பள்ளிவாசலை பிடித்து கண்மணி நாயகம் ஸல்லல்லாலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீலாத்தின்போது மௌலித் ஓத இடம் கொடுக்க முடியாது என்று கூறி நிறுத்திவிட்டனர். எத்தனையோ வருடங்களாக ஓத இடம் கொடுக்கவில்லை. சமீபத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட்டு கடைசியில் வக்பு சபை தலையிட்டு இடம் கொடுக்குமாறு நிர்வாக சபைக்கு அறிவுறுத்தியது.
.
♦ பள்ளிவாசல் பெயர் ஏதேனும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையோடு சம்பந்தப்பட்டு இருந்தால் ஏதேனும் காரணம் சொல்லி அதனையும் மாற்றுவர். அப்படி மாற்றிய பள்ளிவாசல் பெயரை இங்கு இணைத்துள்ள படத்தில் பார்க்கலாம். இது இலங்கை அக்குரனையில் நடந்தது.
.
இதேபோல, இலங்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் போன்ற பல மகான்கள் கட்டிய பல பள்ளிவாசல்கள் இன்று இந்த தப்லீக் ஜமாத்தினர் கையில்தான் உள்ளது. எப்போது இவர்கள் Trustee Board - பள்ளி நிர்வாக சபையை பொறுப்பெடுக்கின்றனறோ, இவர்கள் செய்யும் முதல் வேலை ஸலவாத்தை நிறுத்துவது, வருடா வருடம் அந்த பள்ளிவாசலில் மௌலித் ஓதி வந்தால் அதனை நிறுத்துவது.
.
எப்படி பாலஸ்தீன மண்ணை கைப்பற்றி அதை செய்யாதே, இதை செய்யாதே என்று இன்று இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் சட்டம் போடுகின்றனரோ அப்படிதான் இந்த முனாபிக்குகளும். நாங்கள் காசு போட்டு கஷ்டப்பட்டு கட்டிய பள்ளிவாசலை பிடித்து விட்டு எமக்கு இடம் தர முடியாது என்று கூறுவது இந்த முனாபிக்குகளுக்கு கை வந்த கலை.
.
நினைவில் வைத்து கொள்ளுங்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்னும் வழிகேடன் தனி பள்ளி கட்டி, தனித்து ஒதுங்கி விட்டான். அவனால், எமக்கு பிரச்சினை இல்லை. காரணம், எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறோம் அவன் வழிகேடன் என்று. யாரும் அவனை பின்தொடர்ந்து போவது இல்லை.
.
ஆனால் இந்த தொப்பி போட்ட, எங்களோடு ஒன்றாக இருந்து, மத்ஹபை பின்பற்றுகிறோம் என்று கூறும் இந்த முனாபிக்குகளோ மிக ஆபத்தானவர்கள். கூட இருந்து குழி பறிக்கும் கூட்டம். தவ்ஹீத் ஜமாஅத் என்னும் வழிகேடனை விட மிக ஆபத்தான வழிகேடன் தான் இந்த தப்லீக் ஜமாஅத். காரணம் எதிரியை விட துரோகி மிக ஆபத்தானவன். கூட இருந்து குழி பறிப்பவன்.
.
இன்னொரு விசயத்தையும் சொல்லி ஆக வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத்காரன்கள் வழிகேடானாக இருந்தாலும் இந்த தப்லீக்காரர்களை போன்று பள்ளி திருடுவது இல்லை. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் இரட்டை வேஷம் போடுவது இல்லை. ஆனால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாத தப்லீக் காரர்களின் வேலையை பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. ஊருக்கு ஊர் இவர்களின் வேஷம் வித்தியாசப்படுகிறது.
.
இந்த தப்லீக் வழிகேடர்களை ஆதரிக்கும் சுன்னத் வல் ஜமாத்தினரே! உங்களிடம் நாம் அன்போடு வேண்டிக்கொள்வது ஒன்றுதான். ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டே தான் இருப்பான். உங்களை திட்டம் போட்டு ஒரு கூட்டம் ஏமாற்றி கொண்டு இருக்கிறான். ஆனால் நீங்கள் இன்னும் தூக்கத்தில் இருக்கிறீர்கள். இன்னும் ஏமாறாதீர்கள். நீங்கள் இந்த தப்லீக்காரர்களுக்கு காட்டும் அபிமானத்தை, சுன்னத் வல் ஜமாஅத் மீது காட்டுங்கள். அதற்காக உழையுங்கள். இந்த வேஷதாரிகளுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள். அவன் என்ன பண்ணினாலும் அவனுக்கு பள்ளியில் இடம் கொடுக்காதீர்கள். கடைசியில் இலங்கையில் அத்தனை பள்ளிவாசலிலும் நடைப்பெற்றதுதான் உங்கள் பள்ளியிலும் நடக்கும். புத்திசாலிக்கு சைக்கினை ஒன்றே போதும். கண்களை திறந்து கவனமாக இருங்கள்.
.
அதேபோல தப்லீக் ஜமாஅத்தினரே! உங்களிமும் ஒரு வேண்டுகோள். உண்மையில் உங்களுக்கு தன்மானம் இருந்தால், சுயகௌரவமும் வெட்கமும் இருந்தால், நீங்கள் எந்த எந்த பள்ளிவாசல்களை திருடினீர்களோ, அந்த பள்ளிவாசல்களை திரும்பவும் சுன்னத் வல் ஜமாஅத் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, சுய மரியாதையோடு உங்கள் சொந்த பணத்தை கொண்டு புது பள்ளிவாசல் கட்டி உங்கள் வேலைகளை செய்யுங்கள். உங்கள் கொள்கைகளை பரப்புங்கள். அடுத்தவன் பணத்தில் குளிர் காய உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதுதான், நீங்கள் தீனுக்காக செய்யும் சேவையா? இதைதான் உங்கள் தப்லீக் ஜமாஅத் தலைவர்கள் கற்று தந்தார்களா? முதலில் நீங்கள் திருந்துங்கள். பின்னர் மற்றவர்களை திருத்துங்கள்.
.
ஹஜ்ரத் அபூ ஸயீதுனில் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
.
"எனது உம்மத்தில் பிரிவினையும், வேற்றுமையும் எழுதப்பட்ட ஒன்றாகும். அதன்படி ஒரு கூட்டம் வெளியாகும். அவர்களின் வெளித்தோற்றம் மற்றவர்களை கவரும். ஆற்றல் நிறைந்த அவர்களது பேச்சுக்கள் கேட்போருக்கு அவர்கள் மீது நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும். ஆனால் அவர்களின் நடத்தை கெட்டவைகளாகயிருக்கும்.
.
அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. வில்லை விட்டுப் பாய்ந்து செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டு வெளியேறிவிடுவார்கள். எவ்வாறு வில்லை விட்டுச் சென்ற அம்பு வில்லுக்குத் திரும்பாதோ, அவ்வாறே தீனின் பால் திரும்புவது அவர்களுக்கு சாத்தியமாகாது. குணத்திலும், செய்கையிலும் மிக மோசமானவர்களாயிருப்பார்கள்.
.
அவர்கள் ஜனங்களை தீனின் பால் அழைப்பார்கள். ஆனால் தீனுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. யார் அவர்களுடன் போர் புரிவார்களோ, அவர்கள் இறைவனுடன் மிக நெருங்கியவர்களாக இருப்பார்கள்.
.
என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்ல, அதற்கு தோழர்கள் நாயகமே! அவர்களின் முக்கிய அடையாளமென்ன? என்று கேட்க அதற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அவர்களின் அடையாளம் மொட்டையடிப்பதாகும் என்று நவின்றனர்.
.
நூல் - மிஷ்காத்

ضياء اليافع ابن حمزة