Wednesday, September 7, 2016

என்ன! காஃபாவின் இமாமாக இருப்பது ஹக்கில் இருப்பதற்கான ஆதாரம் ஆகுமா?"

என்ன! காஃபாவின் இமாமாக இருப்பது ஹக்கில் இருப்பதற்கான ஆதாரம் ஆகுமா?"

மக்காவிலும்,மதினாவிலும் இன்று வஹாபியவழிகேடர்களின் ஆட்சி நடைபெறுகிறது. மக்கா மற்றும் மதினா ஈமானின் "மர்க்கஸ்" ஆகும். ஆனால் ஆரம்பம் முதலிருந்தேஇவைகள் பிறவழி கேடர்கள்கையில் இருந்து வந்துள்ளது. அதுஇன்று வரைக்கும் நடந்தேறிக்கொ ண்டருக்கிறது. ஆனால் சிலநயவஞ்சகர் கள் இந்த உண்மையை மறைப்பதர்காக "அல்லாஹ்வின் இல்லம் எவ்வாறு பிறர் கையில் இருக்கும்?"
எனக்கூறுகின்றனர்   இதுவும் உண்மை மற்றும் பொய்மையை பிரித்தறிந்து கொள்வதற்கான அல்லாஹ்வினுடைய ஒரு "ஹிக்மத்" ஆகும். அந்தநாளை நினைவுகூறுங்கள் அப்பொழுது காஃபா காபிர்கள் கையில் இருந்தது.

நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மக்காவைவிட்டு மதினாஷரீப் ஹிஜ்ரத் செய்தார்கள். அப்பொழுதும் அது அல்லாஹ்வின் இறைஇல்லம் தான். அதில் 360 சிலைகள் இருந்தன

(புகாரிஷ ரீப்:பாகம்2 பக்கம்614)

இப்பொழுது கூறுங்கள் அல்லாவின் இல்லம் பிறறின் பிடியில்

இருந்ததில்லையா?
என்ன பதில்கூறப் போகிறீர்கள்?

காஃபத்துல்லாஹ் ஆரம்பம் முதலே அல்லாஹ்வின் கண்ணி யத்திற்குரிய இறைஇல்லமாகவேஇருந் தது.

அங்கே முஷ்ரிக்கீன் உடையணியாத வன்னம் தவாப் செய்பவ ர்களாக இருந்தார்கள். மக்காவின்வெற் றிக்கு பிறகு "எந்தவொரு முஷிரிக்கும் ஆடையின்றி தவாப் செய்யக்கூடது"என
நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூஅலை ஹிவஸல்லம் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
(புகாரிஷரீப்:பாகம்2 பக்கம்206)

இதிலிருந்து நாம் காஃபா வழிகேடர்களி ன் பிடியில்இருந்துள்ளது என்பதை அறிகிறோம். மேலும் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வுலகைவிட்டுப்பிரிந்தபின் னர் ஹிஜ்ரி360−ல் மக்கா,மதினாவானது ஜக்காத்தை மறுப்பாளர்கையில் வீழ்ந்தது.
மேலும் முர்த்ததான அபுதாஹீ ர்குராமதியின் காரணமாக ஹஜ் தடைசெய்யப்பட்டது. பல ஹாஜிகள் ஷஹீதாக்கப்பட்டார்கள். மேலும் பெரிய அநீயியமாக காஃபத்துல்லஹ்விலிருந்து "ஹஜ்ரேஅஷ்வத்"−ஆனது 20 வருடம் தனித்துவைக்கப்பட்டது.

(ஹூஜ்ஜத்துல் லாஹ்அலல்ஆலமீன்:பாகம்3:பக்கம்829)

பிறகு ஹிஜ்ரி654−ல் கலிபா முஸ்தாஸிம்பில்லா−வின் காலத்தில் மக்கா,மதினா ஷியாவின் பிடியில் வீழ்ந்தது. அக்காலகட்டத்தில் மக்கா, மதினா அணைத்திலும் இமாம்கள், கதீப் கள் காஃபத்துல்லாஹ்−வின் இமாம் அணைவரும் ஷியாக்களாகவே இருந்தா ர்கள். அங்கு சுண்வஜமாத்தினர் வாழ்வதே சிரமமாக இருந்தது மட்டுமல் லாமல் சுண்ணத்வஜமாத் கொள்கைக் கான புத்தகங்கள் படிப்பதர்கும் தடை விதிக்கப்பட்டது.

(வபா−வுல்−வபா பாகம் 1, பக்கம்429)

காஃபத்துல்லாவிற்கு இமாமாக இருப்பது ஹக்கிற்கு ஆதாரம் என்றால் ஷியாவும் காஃபாவின் இமாமாக இருந்துள்ளார்களே! என்ன! ஷியாவாக இருப்பது ஹக்கிற்கு ஆதாரமாகுமா? ஷியாவின்பின்னால் தொழுகை நிறைவே றுமா? காஃபாவின் இமாமை குறைகூரா தீர்கள் எனக்கூறுபவர்களே, இப்பொழுது என்னபதில் கூறுவீர்கள்! இப்பொழுது என்னபதில் கூறுவீர்களோ, அதேபதில்தான் அன்றைக்கு காஃபாவில் இருந்த ஷியாஇமாமிற்கும். கொடுங்காலனான யஜீத் மக்கா,மதினா வைக்கைப்பற்றி காஃபத்துல்லாஹ்வை யும்,மதினாவையும் அவகண்யப்படுத்தி னான்.மஜ்ஜிதேநபவியை சுற்றிவளைத்து அங்கு 3நாட்கள் தொழுகைநடத்துவதற் குத் தடைவிதித்தான்.காஃபத்துல்லாஹ் −வின் மேல்கற்களை வீசினான். காஃபத்துல்லாஹ்−வின் திரையைகிழித் தான். மக்கா,மதினாவின் பெண்களை தனது படைவீரர்களுக்கு விருந்தாக்கி னான்.(இர்பானேஷரீயத்:பாகம்2:பக்கம் 31 மேலும் தக்மிலுல்ஈமான பக்கம்71). இதேவழிகேடர்களில் வந்த இப்னுஅப்துல்வஹ்ஹாப் நஜ்தியும் மக்கா,மதினாவைக் கைப்பற்றினான். பள்ளிவாசல்கள் மற்றும் ஸஹாபாபெரும க்கள்களின் கபர்களை ஷஹீதாக்கினா ன். பலஉலமாக்களை ஷஹீதாக்கினான். ஸலவாத்தும்,ஸலாமுமக ஓதுவதற்கு தடைவிதித்தான். சுண்ணத்வஜமாஅத்தி னரை காபிர் என பத்வா கொடுத்தான்.

( தவஸ்ஸூலுபின்நபி பக்கம்105, ரத்துல் முக்தர்அலதுர்ரேமுக்தர், கிதாபுல்ஈமான் பக்கம்309).

1925−ல் வஹபிய கொள்கையுடைய ஹாமில்ஷாஅப்துல் அஜீஸின் பிடியில் மக்கா,மதினா வீழ்ந்தது. இவன் தர்காக்களை இடாத் துத்தள்ளினான். ஸலவாத் மற்றும் ஸலா மிற்கு தடைவிதித்தான். மக்காவின் மோ தினார் பாங்கு சொன்னவுடன் ஸலவாத் ஓதுபவராக இருந்தார். இந்தஒரு காரணத்திற்காக அவரை ஷஹீதாக்கினான்.

(தவஸ்ஸீலுபின்நபி பக்கம்105).

சுண்ணத்வஜமத்தனரே இப்பொழுது புரிகிறதா மக்கா மற்றும் மதினாவில் ஏன் மீலாதுநபி கொண்டாட ப்படுவதில்லை, வன்னவிளக்குகளால் ஏன் அலங்கரிக்கப்படுவதில்லை? ஸலாத்தும் ஸலாமும் ஏன் ஓதப்படுவதிலகலை?என்று. இதுமட்டுமல்ல நபிகள்நாயகம்ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் ரௌலா ஷரீப்பில் நின்று ஸலவாத்தும் ஸலாமும் ஓதுவது பித்தத் என பத்வா கொடுத்துள் ளார்கள்
(பதவுல்மஜ்ஜித்ஷராஹ்கிதாபுல் தௌஹீத் பக்கம்219)

சுண்ணத்வஜமா அத்தினரே இப்பொழுது புரிகிறதா அங்கு ஏன் சுண்ணத்வஜமாத்தின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை? என்பது.அப்பாவி சுண்ணத்வஜமாஅத்தி னரே!இந்த பதிவின்மூலம் தாங்கள் தெளிவாக விளங்கியிருப்பீர்கள் பல காலகட்டங்களில் பல்வேறு வழிகேடர் களின் அதிகாரத்தின் பிடியில் மக்கா மற்றும் மதினா வந்துள்ளது என்பதை. இன்றும் வழிகேடர்களான வஹாபிகளி ன்கையில் உள்ளது. எனவேதான் அங்கு மீலாதுந்நபி சம்பந்தமான எந்தவொரு செயலும்நடைபெறுவதில்லை."

எனவே சுண்ணத்வஜமாஅத்தனரே முனாபிக்கீன் களான(வஹாபி,அஹலேஹதீஸ்,தேவ்பந்தீ,தப்லீக்ஜமாஅத்,மௌதூதி)இவர்களின் கேள்விகளால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.

உண்மையில் நீங்கள் ஹக்கின் பக்கம் இருக்கிறீர்கள்

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

Plz Subscribe
ஈமானை பாதுகாப்போம்
official channel on
YOUTUBE ⬇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

Forward
All
Sunnth Jamath Group's

💯